IND vs AUS | பெர்த்தில் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்: தாக்குப்பிடிக்குமா இந்திய அணி?

By செய்திப்பிரிவு

பெர்த்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட்கிரிக்கெட் போட்டி பெர்த் நகரில் இன்று தொடங்​கு​கிறது. 5 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரில் விளை​யாடு​வதற்காக இந்திய அணி, ஆஸ்திரேலி​யா​வில் சுற்றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்​தில் இன்று தொடங்​கு​கிறது. முதல் டெஸ்ட் போட்​டி​யில் ரோஹித் சர்மா விளை​யாடாத​தால் இந்திய அணியானது வேகப்​பந்து வீச்​சாளரான ஜஸ்பிரீத் பும்ரா தலைமை​யில் களமிறங்​கு​கிறது.

ஆஸ்திரேலிய மண்ணில் 2018-19 மற்றும் 2020-21-ம் ஆண்டு​களில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களை இந்திய அணி வென்​றிருந்​தது. இதனால் இம்முறை​யும் இந்திய அணி மீது எதிர்​பார்ப்பு உள்ளது. சமீபத்​தில் சொந்த மண்ணில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என இழந்த நிலை​யில் ஆஸ்திரேலி​யா​வுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சந்திக்​கிறது இந்திய அணி. யஷஸ்வி ஜெய்ஸ்​வாலுடன் தொடக்க வீரராக கே.எல்​.ராகுல் களமிறங்​கக்​கூடும். ஷுப்மன் கில் காயம் அடைந்​துள்ள​தால் தேவ்தத் படிக்​கலுக்கு வாய்ப்பு வழங்​கப்​படக்​கூடும்.

4-வது இடத்​தில் வழக்கம் போல விராட் கோலி களமிறங்​கு​வார். 5-வது இடத்​தில் துருவ் ஜூரெல் களமிறங்க வாய்ப்பு உள்ளது. சமீபத்​தில், ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஆட்டத்​தில் அவர், சிறப்பாக செயல்​பட்​டிருந்​தார். துருவ் ஜூரெல் களமிறங்​கும் பட்சத்​தில் சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்​தான்.

6-வது இடத்​தில் ரிஷப் பந்ந் களமிறங்​கு​வார். மிதவேகப்​பந்து வீச்சு ஆல்ர​வுண்​டரான நித்​திஷ் குமார் ரெட்டி அறிமுக வீரராக களமிறங்க வாய்ப்பு உள்ளது. பெர்த் ஆடுகளம் முற்றி​லும் வேகப்​பந்து வீச்​சுக்கு சாதகமாக இருக்கும் என்ப​தால் இந்திய அணியின் விளை​யாடும் லெவனில் நித்​திஷ் குமார் இடம் பெறு​வதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. வேகப்​பந்து வீச்​சாளர்​களாக ஜஸ்பிரீத் பும்​ரா​வுடன், ஆகாஷ் தீப், முகமது சிராஜ் அல்லது ஹர்சித் ராணா அல்லது பிரசித் கிருஷ்ணா இடம் பெறக்​கூடும்.

சுழற்​பந்து வீச்​சாளராக அணியில் இடம் பெறு​வ​தில் அஸ்வின், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவக்​கூடும். இதில் அஸ்வின் இடம் பெற வாய்ப்பு அதிகம் உள்ளது. ஏனெனில் ஆஸ்திரேலிய அணியின் பேட்​டிங் வரிசை​யில் இடது கை பேட்​ஸ்​மேன்கள் அதிகம் உள்ளனர். ஆஸ்திரேலி​யா​வுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 4-0 என வென்​றால் மட்டுமே ஐசிசி உலக டெஸ்ட் சாம்​பியன்​ஷிப் இறுதிப் போட்​டிக்கு தகுதி பெற முடி​யும் என்ற சூழ்​நிலை உள்ளது.

இதனால் இந்திய அணி நெருக்​கடி​யுடனேயே களமிறங்​கு​கிறது. இதுஒரு​புறம் இருக்க ரோஹித் சர்மா களமிறங்​காதது, ஷுப்மன் கில் காயம் அடைந்​துள்ளது, கே.எல்​.ராகுல், விராட் கோலி ஆகியோர் பேட்​டிங்​கிலும், முகமது சிராஜ் பந்து வீச்​சிலும் பார்​மின்றி தவிப்பது இந்திய அணியின் கவலையை அதிகரிக்க செய்​துள்ளது. இந்திய அணியில் உள்ள சிலசீனியர் வீரர்​களுக்கு இந்த ஆஸ்திரேலிய சுற்றுப்​பயணம் கடைசியாக அமையக்​கூடும்.

ஏனெனில் ஐசிசி டெஸ்ட் சாம்​பியன்​ஷிப்​பின் அடுத்த 2 ஆண்டு கால சுழற்சி 2025-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பிறகே தொடங்​கு​கிறது. அஸ்வின் 38 வயதை​யும், ரோஹித் சர்மா 37 வயதை​யும் கடந்​து​விட்​டனர். விராட் கோலி 36 வயதை கடந்​துள்ள நிலை​யில், ஜடேஜா 36 வயதை நெருங்க உள்ளார். ஒருவேளை இந்திய அணிஐசிசி டெஸ்ட் சாம்​பியன்​ஷிப் தொடருக்கு தகுதிபெற தவறினால் இவர்​களில் சிலர் தங்களது டெஸ்ட்கிரிக்​கெட் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதக்​கூடும். கடந்த 10 ஆண்டு​களில் ஆஸ்திரேலிய அணி பார்​டர்​-கவாஸ்கர் தொடரை 4 முறை இழந்​துள்ளது.

அதில் இரு முறை சொந்த மண்ணில் தோல்வி அடைந்​திருந்​தது. ஆனால் இந்த காலக்​கட்​டத்​தில் அந்த அணி டி 20 உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை, ஐசிசி டெஸ்ட் சாம்​பியன்​ஷிப் ஆகிய​வற்றில் சாம்​பியன் பட்டம் வென்று அசத்​தி​யது. இதனால் இம்முறை பார்​டர்​-கவாஸ்கர் டிராபிக்கு ஆஸ்திரேலிய அணி அதிக முக்​கி​யத்துவம் கொடுத்து வருகிறது.

வீரர்​களுக்கு சரியான ஓய்வு வழங்கப்பட்டதால் சிறந்த முறை​யில் தயாராகி உள்​ளனர். தொடக்க வீரராக நேதன் மெக்ஸ்​வீனி அறிமுக வீரராக களமிறங்க உள்ளார். இதனால் ஸ்டீவ் ஸ்மித் நடுவரிசை​யில் 4-வது வீரராக களமிறங்​கக்​கூடும். 3-வது இடத்​தில் மார்னஷ் லபுஷேன் விளை​யாடக்​கூடும். இவர்​களைத் தொடர்ந்து டிரா​விஸ் ஹெட், மிட்​செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி ஆகியோர் பேட்​டிங் வரிசையை பலப்​படுத்​தக்​கூடும். வேகப்​பந்து வீச்​சில் கேப்டன் பாட் கம்மின்​ஸுடன் ஜோஷ் ஹேசில்​வுட், மிட்​செல் ஸ்டார்க் இந்திய பேட்​டிங் வரிசைக்கு சவால் கொடுக்க ஆயத்​தமாக உள்ளனர். சுழற்​பந்து வீச்​சில் நேதன் லயன் அழுத்தம் கொடுக்​கக்​கூடும்.

ஆஸ்திரேலியா: பாட் கம்மின்ஸ் (கேப்​டன்), டிரா​விஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, நேதன் மெக்ஸ்​வீனி, ஸ்டீவ் ஸ்மித், மார்னஷ் லபுஷேன், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்லிஷ், நேதன் லயன், மிட்​செல் மார்ஷ், ஸ்காட் போலண்ட், ஜோஷ் ஹேசில்​வுட், மிட்​செல் ஸ்டார்க்.

இந்தியா: ஜஸ்பிரீத் பும்ரா (கேப்​டன்), யஷஸ்வி ஜெய்ஸ்​வால், கே.எல்​.ராகுல், ஷுப்மன் கில், சர்பராஸ் கான், அபிமன்யு ஈஸ்வரன், தேவ்தத் படிக்​கல், விராட் கோலி, ரிஷப் பந்த், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்​சந்​திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்​தர், நித்​திஷ் குமார் ரெட்டி, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா. நேரம்: காலை 7.50; நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

பொறுப்பை நேசிக்கிறேன்: பும்ரா

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பும்ரா கூறும்போது, “முதல் டெஸ்ட் போட்டிக்கு சிறப்பாக தயாராகி உள்ளோம். நான் பொறுப்பை நேசிக்கிறேன். சிறுவயதிலிருந்தே கடினமான வேலையை செய்ய விரும்புவேன். என் உள்ளுணர்வு மீது எனக்கு நிறைய நம்பிக்கை உள்ளது. விராட் கோலியை பற்றி நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. நான் அவரது தலைமையில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானேன். அவருக்கு எந்தவிதமான சிறப்பு உள்ளீடுகளையும் நான் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஒருவர் எத்தனை போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது முக்கியமில்லை. தன்னம்பிக்கைதான் எல்லா வித்தியாசங்களையும் ஏற்படுத்துகிறது.

நாங்கள் நியூஸிலாந்து தொடரிலிருந்து கற்றுக்கொண்டவற்றை உள்வாங்கி முன்னேற வேண்டும். இந்தியாவில் நிலைமைகள் வேறுபட்டவை, இங்குள்ள நிலைமைகள் வேறுபட்டவை, இங்கு நாங்கள் ஏற்கெனவே மாறுபட்ட முடிவுகளைப் பெற்றுள்ளோம். எங்கள் வீரர்களுக்கு நல்ல மற்றும் மோசமான நாட்களை எவ்வாறு கையாள்வது என்பது தெரியும். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்றால், நல்ல நாட்களைப் போலவே, மோசமான நாட்களையும் சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.

சவாலாக இருக்கும்: பாட் கம்மின்ஸ்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறும்போது, “சொந்த மண்ணில் விளையாடும் போது எப்போதும் அழுத்தம் இருக்கும். இந்திய அணி திறமையானது என்பதால், இந்த தொடர் நல்ல சவாலாக இருக்கும். பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்றால் நன்றாக இருக்கும். இந்தியா ஒரு சிறந்த அணி, ஆனால் நாங்கள் நன்கு தயாராகி இருக்கிறோம். இந்திய அணியில் இடம் பெற்றுள்ள நித்திஷ் குமார் ரெட்டி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர். ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக அவர், பெரிதாக பந்து வீசவில்லை. அவரால் பந்தை ஸ்விங் செய்ய முடியும், மிகவும் திறமையானவர்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்