பெருவை வீழ்த்தியது அர்ஜெண்டினா!

By செய்திப்பிரிவு

பியூனஸ் அயர்ஸ்: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் 2026-ம் ஆண்டு அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது.

இதற்கான தகுதி சுற்று பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் தென் அமெரிக்கா நாடுகள் இடையிலான தகுதி சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா, பெரு அணியுடன் நேற்று மோதியது. பியூனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்ஜெண்டினா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த கோலை 55-வது நிமிடத்தில் லவுதரோ மார்டினெஸ் அடித்தார். இதற்கு மெஸ்ஸி உதவியிருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை அர்ஜெண்டினா நெருங்கி உள்ளது. அந்த அணி 12 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, ஒரு டிரா, 3 தோல்விகளுடன் 25 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தென் அமெரிக்கா நாடுகள் இடையிலான தகுதி சுற்றின் அடுத்தக்கட்ட போட்டி 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்