புதுடெல்லி: 2025-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலம் வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த மாதம் 31-ம் தேதி ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் முக்கியமான வீரர்களை தக்கவைத்துக் கொண்டு மற்ற வீரர்களை விடுவித்தனர். இதில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த்தை அந்த அணி நிர்வாகம் தக்கவைத்துக் கொள்ளாமல் விடுவித்து இருந்தது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் ஐபிஎல் ஏலம் முன்னோட்டம் தொடர்பான நிகழ்ச்சியில் பேசுகையில், ‘‘ஏல நடைமுறை முற்றிலும் வேறுபட்டது; அது எப்படி செல்லும் என்று தெரியாது. ஆனால் டெல்லி கேபிடல்ஸ் அணி நிச்சயமாக ரிஷப் பந்த்தை மீண்டும் அணிக்கு கொண்டு வருவார்கள் என்று நினைக்கிறேன். சில நேரங்களில், ஒரு வீரரை தக்கவைக்க வேண்டியிருக்கும்போது, உரிமையாளருக்கும், வீரருக்கும் இடையே எதிர்பார்க்கப்படும் கட்டணங்கள் குறித்து பேச்சு எழக்கூடும்.
அணி உரிமையாளரால் தக்கவைக்கப்பட்ட சில வீரர்களின் தொகையைவிட ஏலத்தில் எடுக்கப்படும் வீரர்களின் தொகை அதிகமாக இருந்துள்ளதை நாம் பார்த்துள்ளோம். எனவே, ரிஷப் பந்த் விஷயத்தில் தக்கவைப்பு தொகையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கலாம் என நான் கருதுகிறேன்.
டெல்லி அணிக்கு கேப்டன் தேவை என்பதால் ரிஷப் பந்த் நிச்சயம் மீண்டும் அந்த அணிக்கு திரும்ப வேண்டும் என்பது எனது கருத்து. ரிஷப் பந்த் தங்கள் அணியில் இல்லை என்றால், அவர்கள் ஒரு புதிய கேப்டனைத் தேட வேண்டும். டெல்லி அணி நிச்சயம் ரிஷப் பந்த்தை தேர்வு செய்யும் என்பதே எனது கருத்து” என்றார்.
இந்நிலையில் சுனில் கவாஸ்கரின் கருத்தை ரிஷப் பந்த் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர், தனது எக்ஸ் வலைதள பதிவில், ‘‘டெல்லி கேபிடல்ஸ் அணியில் என்னுடைய தக்கவைப்பு பணத்தைப் பற்றியது அல்ல என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago