கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இடது கை சுழற்பந்து வீச்சாளரான லசித் எம்புல்தெனியா 2 வருடங்களுக்குப் பிறகு அணிக்கு திரும்பி உள்ளார். கடைசியாக லசித் எம்புல்தெனியா கடந்த 2022-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார். தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 27-ம் தேதி டர்பனில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 5-ம் தேதி போர்ட் எலிசபெத் நகரில் நடைபெறுகிறது.
இலங்கை அணி: தனஞ்ஜெயா டி சில்வா (கேப்டன்), பதும் நிசங்கா, திமுத் கருணாரத்னே, தினேஷ் சந்திமால், ஏஞ்சலோ மேத்யூஸ், குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், ஓஷடா பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரமா, பிரபாத் ஜெயசூரியா, நிஷான் பெரிஸ், லசித் எம்புல்தெனியா, விலன் ரத்னாயகே, அஷிதா பெர்னாண்டோ, விஷ்வா பெர்னாண்டோ, லஹிரு குமரா, கசன் ரஜிதா.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago