சென்னை: ஆடவருக்கான 14-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் சென்னை எழும்பூரில்உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வந்தது. 31 அணிகள் கலந்துகொண்ட இந்த தொடரின் இறுதிப் போட்டியில்நேற்று ஒடிசா - ஹரியானா அணிகள் மோதின.இதில் ஒடிசா 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணி சார்பில் லக்ரா ஷில்லானந்த் ஹாட்ரிக் கோல் (48, 57 மற்றும் 60-வது நிமிடங்கள்) அடித்து அசத்தினார். ரஜத் ஆகாஷ் திர்கே (11-வது நிமிடம்), லக்ரா பிரதாப் (39-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல்அடித்தனர். தேசிய சீனியர் சாம்பியன்ஷிப்பில் ஒடிசா அணி பட்டம்வெல்வது இதுவே முதன்முறை யாகும். 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் உத்தரபிரதேச அணி 2-1 என்ற கோல் கணக்கில் மணிப்பூரை தோற்கடித்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago