தேசிய சீனியர் ஹாக்கி போட்டி: ஹரியானா, மணிப்பூர் அணிகள் கால் இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: ஆடவருக்கான 14-வது தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஹரியானா 8-0 என்ற கோல் கணக்கில் மிசோரம் அணியை வீழ்த்தியது. அந்த அணி தரப்பில் ரோஹித் 4 கோல்களையும் ரஜிந்தர் சிங், ஜோகிந்தர் சிங், பர்தீப் சிங், அமித் சாஹல் ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர்.

ஹரியானாவுக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் அந்த அணி 9 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

‘ஹெச்’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் மணிப்பூர் 10-0 என்ற கோல் கணக்கில் அசாம் அணியை வீழ்த்தியது. அந்த அணி தரப்பில் லெய்ஷ்ராம் திபு சிங் 3 கோல்களையும், மொய்ராங்தெம் தனஞ்சய் மீதேய் 2 கோல்களையும், தவுனோஜம் இங்கலெம்பா லுவாங், நிங்கோம்பம் ஜென்ஜென் சிங், கணேந்திரஜித் நிங்கோம்பம், பாக்கர் நிங்கோம்பம், சிங்லென்சனா சிங் கங்குஜம் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் 9 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதல் இடம் பிடித்து கால் இறுதி சுற்றில் கால்பதித்தது மணிப்பூர் அணி.

தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் இன்று ஓய்வு நாளாகும். நாளை (13-ம் தேதி) கால் இறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் கால் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பஞ்சாப், மணிப்பூருடன் மோதுகிறது. தொடர்ந்து ஹரியானா - மகாராஷ்டிரா, தமிழ்நாடு - உத்தரபிரதேசம், கர்நாடகா - ஒடிசா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்