மும்பை: ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற உள்ள பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றுள்ளது. இந்நிலையில், அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆஸி. பயணத்துக்கு முன்னதாக பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அண்மையில் சொந்த மண்ணில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை இழந்தது. இந்நிலையில், இந்திய அணியின் செயல்பாடு மற்றும் ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்த கேள்வி, விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் கம்பீர் பேசி இருந்தார்.
“ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்பார் என நான் நம்புகிறேன். இருப்பினும் இப்போதைக்கு அதை உறுதியாக சொல்ல முடியாது. அவர் பங்கேற்பது குறித்த தகவல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக தெரிவிக்கப்படும்.
அணியில் அபிமன்யு, கே.எல்.ராகுல் ஆகியோர் உள்ளனர். கேப்டன் ரோஹித் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடாத பட்சத்தில் அவர்களில் யார் தொடக்க ஆட்டக்காரர் என முடிவு செய்வோம். போட்டிக்கு முன்பாக சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்வோம். எங்களுக்கு ஆப்ஷன் உள்ளது.
» நடிகர் டெல்லி கணேஷ் உடல் தகனம்
» 'மிஷன்: இம்பாசிபிள் தி பைனல் ரெகனிங்' டீசர் எப்படி? - டாம் குரூஸின் மிரட்டும் ஆக்ஷன்
கே.எல்.ராகுல் பல திறன்களை கொண்டுள்ள வீரர். அவர் இன்னிங்ஸை ஓபன் செய்வார், மூன்றாவது மற்றும் ஆறாவது பேட்ஸ்மேனாக ஆடுவார். ஒருநாள் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங் பணியையும் கவனிப்பார். அவரை போன்ற ஒரு வீரர் மற்ற அணிகளில் உள்ளனரா என பாருங்கள். அணிக்கு தேவையானதை அவர் செய்வார்.
நாங்கள் ஆஸ்திரேலியாவில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம். உலகின் சிறந்த இரண்டு அணிகள் விளையாடும் தொடர் இது. தேசத்துக்காக விளையாடும் போது ஒவ்வொரு தொடரும் முக்கியம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு நாங்கள் தகுதி பெறுவோமோ என்பது குறித்து நாங்கள் யோசிக்கவில்லை. ரோஹித் மற்றும் கோலியின் ஃபார்ம் எனக்கு கவலை தரவில்லை. அவரகள் இருவரும் இந்த ஆட்டத்தின் மீது அதீத ஆர்வம் கொண்டுள்ளனர், சாதிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். ஒரு அணியாக இந்த தொடரில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம்” என தெரிவித்தார்.
கே.எல்.ராகுல், கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் ஃபார்ம் குறித்து ரிக்கி பாண்டிங் கேள்வி எழுப்பி இருந்தார். இந்திய அணி மீதும் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளது. இது அனைத்துக்கும் கம்பீர் பதில் அளித்திருந்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago