தேசிய சீனியர் ஹாக்கி போட்டி: கால் இறுதியில் பஞ்சாப் அணி

By செய்திப்பிரிவு

சென்னை: 14-வது ஆடவருக்கான தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் ஹாக்கி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பஞ்சாப், தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ அணியை எதிர்த்து விளையாடியது. இதில் பங்ஞ்சாப் அணி 8-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இது பஞ்சாப் அணிக்கு 2-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் ‘ஏ’ பிரிவில் 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து பஞ்சாப் அணி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

‘எஃப்’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் உத்தரபிரதேச அணி 11-1 என்ற கோல் கணக்கில் ஜம்மு & காஷ்மீர் அணியை வீழ்த்தியது. இது உத்தரபிரதேச அணிக்கு ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் தனது பிரிவில் 9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து கால் இறுதி சுற்றில் கால்பதித்தது உத்தரபிரதேச அணி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

26 mins ago

விளையாட்டு

35 mins ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்