“நான் அப்படித்தான் விளையாடுவேன்” -  ஆஸி., லெஜண்டுக்கு ஃபிரேசர் மெக்கர்க் பதிலடி

By ஆர்.முத்துக்குமார்

பாகிஸ்தானுக்கு எதிராக நடந்து வரும் ஒருநாள் தொடர் 1-1 என்று சமன் ஆன நிலையில், ஆஸ்திரேலிய பேட்டர்கள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களிடம் திணறினர். தொடக்க வீரர் மேத்யூ ஷார்ட், ஐபிஎல் டெல்லி கேப்பிடல்ஸ் அதிரடி புகழ் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் ஆகியோர் ஆடும் ஆட்டத்தை ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பர் இயன் ஹீலி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மெல்போர்னில் ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டியை நூலிழையில் வென்றது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சில் சிக்கி 164 ரன்களுக்கு மடிய, மீண்டும் இலக்கை விரட்டிய பாகிஸ்தான் சயீம் அயூப் அதிரடியில் அப்துல்லா ஷபிக் இட்ட அடித்தளத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி செம அடி கொடுத்தது. இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய தொடக்க வீரர்கள் மேட் ஷார்ட், பிரேசர் மெக்கர்க் சொதப்பினர். இவர்களது பேட்டிங்கை தளர்வான, ஈகோத்தனமான பேட்டிங் என்றும், சூழ்நிலை மரபான அணுகுமுறையைக் கோரும்போது இப்படியா சிறுபிள்ளைத்தனமாக ஆடுவது என்று இயன் ஹீலி கடும் விமர்சனம் செய்துள்ளார். நடைமுறை அறிவுடன் ஆட வேண்டும், கற்பனாவாத அதிரடி ஆட்டமெல்லாம் எல்லா சூழ்நிலையிலும் சாத்தியமில்லை என்ற புத்தி வேண்டும் என்று இயன் ஹீலி கடுமையாகச் சாடியுள்ளார்.

“மேத்யூ ஷார்ட், மெக்கர்க் ஆகியோரின் ஈகோ அரைமணி நேரம் கூடத் தாங்குவதில்லை. இது சர்வதேச கிரிக்கெட் உங்கள் வீட்டு கொல்லைப்புற கிரிக்கெட்டோ, பள்ளி கிரிக்கெட்டோ அல்ல. ஷாட் செலக்‌ஷன் ஒட்டுமொத்த அணியினரிடத்திலும் படு மோசம், குறிப்பாக ஷார்ட், மெக்கர்க்கின் ஷாட் செலக்‌ஷன் படுமோசம். கிரிக்கெட் உள்கட்டமைப்பு மீது அதிகம் முதலீடு செய்யும் ஒரு அமைப்பிலிருந்து இத்தகைய ஷாட்களை ஆடும் வீரர்கள்தான் கிடைத்தார்களா? ஸ்கூல்யார்டு bullies போல் ஆடுகின்றனர். இது ஆரோக்கியமானதல்ல.” என்று சாடியுள்ளார்.

இது குறித்து மெக்கர்க் கூறும்போது, “எங்கள் ஆட்டப் போக்கை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. ஆட்டம் மாறிவருகிறது. முதல் 10 ஓவர்களில் அடித்து ஆடினால்தான், பின்னால் வருபவர்கள் நினைத்த ஸ்கோரை எட்ட ஆட முடியும். பழைய ஒருநாள் போட்டி மாதிரி 240-250 ரன்களுக்கு அங்கு நின்று கொண்டு தேய்த்துக் கொண்டு இருக்க முடியாது. நானும் ஷார்ட்டும் அப்படித்தான் ஆடுவோம். இத்தகைய அதிரடி ஆட்டத்துக்கு தான் எங்களை அணியில் தேர்வு செய்துள்ளார்கள். தொடக்கத்திலிருந்தே ‘அடி’ என்பதுதான் எங்களுக்கு இட்ட பணி” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவை பாகிஸ்தான் அடிலெய்டில் 1996-ம் ஆண்டுக்குப் பிறகு நேற்று தான் முதல் முறையாக வென்றது. 2005 முதல் ஆஸ்திரேலிய மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடிய 14 ஒருநாள் போட்டிகளில் 13-ல் ஆஸ்திரேலிய அணியே வென்றது என்ற சாதனை நேற்று மாற்றி அமைக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

6 days ago

மேலும்