சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ்: முதலிடத்துக்கு முன்னேறினார் அர்ஜுன் எரிகைசி

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2-வது பதிப்பு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் 4-வது நாளான நேற்று 4-வது சுற்று போட்டிகள் நடைபெற்றன.

இதில் மாஸ்டர்ஸ் பிரிவில் முதல் போர்டில் ஈரானின் அமீன் தபதாபேயியுடன் பலப்பரீட்சை நடத்தினார் உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி. கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன் எரிகைசி 52-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர், முழுமையாக ஒரு புள்ளியை பெற்றதுடன், அமீன் தபதாபேயியை (2.5) கீழே இறக்கி பட்டியலில் 3.5 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறினார்.

சாலஞ்சர்ஸ் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஆர்.வைஷாலி, பிரணவை எதிர்கொண்டார். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரணவ் 59-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். பிரணவ் தொடக்கத்திலேயே ராணியை இழந்த போதிலும் அதன் பின்னர் துணிச்சலான நகர்வுகளால் வைஷாலிக்கு அழுத்தம் கொடுத்து வெற்றியை வசப்படுத்தினார். அவர், பெறும் தொடர்ச்சியான 4-வது வெற்றி இதுவாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

34 mins ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்