ஹரிஸ் ரவூப்பின் பந்து வீச்சு, சயீம் அயூப்பின் பேட்டிங்கால் 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸி.க்கு பதிலடி கொடுத்தது பாகிஸ்தான்

By செய்திப்பிரிவு

அடிலெய்டு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஹரிஸ் ரவூப்பின் அபாரமான பந்து வீச்சு மற்றும் சயீம் அயூப்பின் சிறப்பான பேட்டிங் ஆகியவற்றால் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அடிலெய்டு நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 35 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 48 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் சேர்த்தார்.

மேத்யூ ஷார்ட் 19, ஜோஷ் இங்லிஷ் 18, ஆடம் ஸாம்பா 18, கிளென் மேக்ஸ்வெல் 16, ஆரோன் ஹார்டி 14, ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் 13, மார்னஷ் லபுஷேன் 6 ரன்களில் நடையை கட்டினர். பாகிஸ்தான் அணி தரப்பில் ஹரிஷ் ரவூப் 8 ஓவர்கள் வீசி 29 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். ஷாகின் ஷா அப்ரிடி 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

164 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணி 26.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய மண்ணில் 2017-ம் ஆண்டுக்கு பின்னர் பாகிஸ்தான் அணி பெற்ற முதல் வெற்றியாக இது அமைந்தது. தொடக்க வீரரான சயீம் அயூப் 71 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் விளாசிய நிலையில் ஆடம் ஸாம்பா பந்தில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான அப்துல்லா ஷபிக் 69 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 64 ரன்களும், பாபர் அஸம் 15 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்ட நாயகனாக ஹரிஸ் ரவூப் தேர்வானார்.

9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 1-1 என சமநிலையை அடையச் செய்துள்ளது. மெல்பர்னில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டி நாளை (10-ம் தேதி) பெர்த் நகரில் நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்