தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணி 43-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி

By செய்திப்பிரிவு

சென்னை: ஆடவருக்கான 14-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன் ஷிப் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று எஃப் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் உத்தரபிரதேசம் 4-1 என்ற கோல் கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தியது. ‘சி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு அந்தமான் & நிக்கோபார் அணிகள் மோதின.

இதில் தமிழ்நாடு அணி 43-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் கார்த்திக் 13 கோல்களை அடித்து மிரளச் செய்தார். அவருக்கு அடுத்தபடியாக சுந்தர பாண்டி, சோமன்னா ஆகியோர் தலா 9 கோல்களையும், மாரீஸ்வரன் சக்திவேல் 6 கோல்களையும் பிரித்வி 3, செல்வ ராஜ் கனகராஜ் 2, ஷியாம் சுந்தர் 1 கோலையும் அடித்தனர்.

தமிழ்நாடு அணிக்கு இது 2-வது வெற்றியாகும். 3 ஆட்டங்களில் விளையாடி உள்ள தமிழ்நாடு அணி 2 வெற்றி, ஒரு டிராவுடன் 'சி' பிரிவில் 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதே பிரிவில் மத்திய பிரதேச அணியும் 7 புள்ளிகளை பெற்றிருந்தது. ஆனால் கோல்கள் வித்தியாசத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அணி முதலிடம் பிடித்து கால் இறுதியில் கால்பதித்தது. தமிழ்நாடு அணி 52 கோல்களை அடித்த நிலையில் 2 கோல்களை மட்டுமே வாங்கியிருந்தது. அதேவேளையில் மத்திய பிரதேச அணி 48 கோல்களை அடித்த நிலையில் 2 கோல்களை வாங்கியிருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்