ரஷ்யாவால் முதல் சுற்றை தாண்ட முடியுமா?

By பெ.மாரிமுத்து

லகக் கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பெற்றதால் தகுதி சுற்றில் விளையாடாமல் நேரடியாக பிரதான சுற்றுக்குள் நுழைகிறது ரஷ்ய அணி. ரஷ்ய கால்பந்து வரலாற்றில் தற்போதுள்ள அணிதான் மிகவும் வலிமையற்றது என கடுமையான விமர்சனத்துடனே உலகக் கோப்பை திருவிழாவில் களம் காண்கிறது இகோர் அகின்பீவ் தலைமையிலான குழு. கடைசியாக நடைபெற்ற பெரிய அளவிலான 3 தொடர்களான 2014-ம் ஆண்டு உலகக் கோப்பை, 2016-ம் ஆண்டு யுரோ சாம்பியன்ஷிப், 2017-ம் ஆண்டு கான்பெடரேஷன் கோப்பை ஆகியவற்றில் ரஷ்ய அணி ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 3 ஆட்டங்களை டிரா செய்த அந்த அணி 5-ல் தோல்வி கண்டுள்ளது. இந்த 9 ஆட்டங்களிலும் 7 கோல்கள் அடித்த ரஷ்ய அணி 12 கோல்களை வாங்கியது.

ஸ்டானிஸ்லாவ் செர்செஸோவ் பயிற்சியாளராக உள்ள ரஷ்ய அணி சமீபத்தில் நடைபெற்ற நட்பு ரீதியிலான கால்பந்து போட்டிகளிலும் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தவில்லை. பிரான்ஸ், பிரேசில், அர்ஜென்டினா அணிகளுக்கு எதிராக தோல்விகளை சந்தித்த ரஷ்ய அணி ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தை 3-3 என்ற கோல் கணக்கில் டிரா செய்திருந்தது. கடந்த அக்டோபர் மாதம் தென் கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ரஷ்ய அணி அதன் பின்னர் தனது சொந்த மண்ணில் நடைபெற்ற 6 ஆட்டங்களில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. எனினும் உலகக் கோப்பை தொடரை நடத்தும் ரஷ்ய அணி முதல் சுற்றை கடப்பதற்கு இது தடையாக இருக்காது என கருதப்படுகிறது.

ஏனெனில் ரஷ்ய அணி சற்று பலவீனமான பிரிவிலேயே இடம் பிடித்துள்ளது. ரஷ்யா இடம் பிடித்துள்ள ஏ பிரிவில் சவுதி அரேபியா, எகிப்து, உருகுவே அணிகள் உள்ளன. இதில் தரவரிசையில் 17-வது இடத்தில் உள்ள உருகுவே அணி மட்டுமே ரஷ்யாவுக்கு கடும் நெருக்கடி தரக்கூடும். அதேவேளையில் தரவரிசையில் 63-வது இடத்தில் உள்ள சவுதி அரேபியாவை ரஷ்ய அணி எளிதில் வெல்ல வாய்ப்பிருப்பதாகவே விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்தத் ஆட்டம் தான் தொடரில் முதல் ஆட்டமாக நடைபெறுகிறது. மேலும் தரவரிசையில் 46-வது இடத்தில் உள்ள எகிப்து அணியில் நட்சத்திர வீரரான முகமது சாலா காயம் அடைந்துள்ளதால் அந்த அணியையும் ரஷ்யா பதம்பார்க்க வாய்ப்பிருக்கிறது.

இந்த இரு ஆட்டங்களிலும் ரஷ்ய அணி வென்றால் அந்த அணியின் நம்பிக்கை அதிகரிக்கக்கூடும். இந்த நம்பிக்கையானது பலம் வாய்ந்த உருகுவே அணியை லீக் சுற்றில் கடைசியாக எதிர்கொள்வதற்கு பெரிய அளவில் ஊக்கம் அளிக்கும். இது விசித்திரமான சிந்தனையாக இருந்தாலும் இதற்கு களத்தில் செயலாக்கம் கொடுக்கும் பட்சத்தில் ரஷ்ய அணி நாக் அவுட் சுற்றில் கால்பதிக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால் அது அவ்வளவு எளிதானதல்ல. ரஷ்ய அணியில் உலகத் தரம் வாயந்த திறன் இல்லை. மேலும் முன்னணி வீரர்களான விக்டர் வாசின், ஜார்கி டிஹிகியா, அலெக்சாண்டர் கொக்கரின் ஆகியோர் காயம் காரணமாக விலகி உள்ளனர்.

இதில் டிபன்டர்களான வாசின், டிஹிகியா ஆகியோர் கான்பெடரேஷன் கோப்பையில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டனர். அதேவேளையில் கொக்கரின், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் கிளப் அணிக்காக இந்த சீசனில் 35 ஆட்டங்களில் 19 கோல்கள் அடித்து சிறந்த பார்மில் இருந்தார். இம்முறை ரஷ்ய அணியானது சென்டர் பேக்கில் விளையாடக்கூடிய பெடோர் குர்ட்யஸோவ், வலது புற பேக் லைனில் விளையாடக்கூடிய மரியோ பெர்னாண்டஸ், நடுகள வீரரான ஆலன் ஸகோவ் மற்றும் இளம் வீரர்களான அலெக்சாண்டர் கொலுவின், ரோமன் ஸோபின், அலெக்ஸி, அன்டன் மிரன்ச்சுக் ஆகியோரை பெரிதும் நம்பி உள்ளது. கிளப் அணிக்காக கடந்த 3 சீசன்களில் 63 கோல்கள் அடித்துள்ள ஃபியோடார் ஸ்மோலோவும் சற்று பலம் சேர்க்கக் கூடும்.

2014-ம் ஆண்டு உலகக் கோப்பை, 2017-ம் ஆண்டு கான்பெடரேஷன் கோப்பை ஆகியவற்றில் சிறந்த திறனை வெளிப்படுத்தத் தவறிய போதும் கோல்கீப்பிங் பணி மீண்டும் கேப்டன் இகோர் அகின்பீவிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் ரஷ்ய அணி லீக் சுற்றை கடக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்விதான். அதேவேளையில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு மற்றும் முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியாவை வெல்லும் பட்சத்தில் ரஷ்ய அணிக்கு நாக் சுற்று சாத்தியப்பட வாய்ப்பு உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்