சென்னை: இந்தியாவின் வலுவான கிளாசிக்கல் போட்டியான சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 2-வது பதிப்பு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று தொடங்கியது. இதில் மாஸ்டர்ஸ் பிரிவு முதல் சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசி, சகநாட்டைச் சேர்ந்த விதித் குஜராத்தியுடன் மோதினார். அர்ஜுன் எரிகைசி கருப்பு காய்களுடனும், விதித் குஜராத்தி வெள்ளை காய்களுடனும் விளையாடினர்.
இதில் 96-வது நகர்த்தலின் போது அர்ஜுன் எரிகைசி வெற்றியை வசப்படுத்தினார். இதனால் அவர், முழுமையாக ஒரு புள்ளியை பெற்றார். இந்த ஆட்டம்சுமார் 5 மணி நேரம் நடைபெற்றது.
தமிழகத்தைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரம், ஈரானின் அமீன் தபதாபேயியுடன் பலப்பரீட்சை நடத்தினார். இந்த ஆட்டம் 42-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. இதனால் இருவருக்கும் தலா 0.5 புள்ளிகள் வழங்கப்பட்டது.
பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டர் மாக்சிம் வாச்சியர் லாக்ரேவ், ஈரான் கிராண்ட் மாஸ்டரான பர்ஹாம் மக்சூட்லூவுடன் மோதினார். இதில் 50-வது நகர்த்தலின் போது மாக்சிம் வாச்சியர் லாக்ரேவ் வெற்றி பெற்றார். இதனால் அவர், முழுமையாக ஒரு புள்ளியை பெற்றார்.
» ட்ரம்ப் முன்னிலை, கமலாவுக்கு பின்னடைவு - அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் நிலவரம்
» குழந்தை தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம்: மருத்துவ கவுன்சில் நோட்டீஸுக்கு பெண் மருத்துவர் விளக்கம்
அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் லெவோன் அரோனியன், செர்பியாவின் கிராண்ட் மாஸ்டர் அலெக்ஸி சரானாவை எதிர்கொண்டார். இந்த ஆட்டம் 33-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. இதனால் இருவருக்கும் தலா 0.5 புள்ளிகள் வழங்கப்பட்டன.
7 சுற்றுகளை கொண்ட இந்தத் தொடரில் முதல் சுற்றின் முடிவில் அர்ஜுன் எரிகைசி,மாக்சிம் வாச்சியர் லாக்ரேவ் ஆகியோர் தலா ஒரு புள்ளியுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டனர். அரவிந்த் சிதம்பரம், லெவோன் அரோனியன், அலெக்ஸி சாரானா, அமீன் தபதாபேயி ஆகியோர் 0.5 புள்ளிகளுடன் 3 முதல் 6 இடங்களில் உள்ளனர்.
2-வது நாளான இன்று நவம்பர் (6-ம் தேதி) 2-வது சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் அமீன் தபதாபேயி, அலெக்ஸி சரானாவுடன் மோதுகிறார். அர்ஜுன் எரிகைசி, லெவோன் அரோனியனை சந்திக்கிறார். விதித் குஜராத்தி, பர்ஹாம் மக்சூட்லூவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார். அரவிந்த் சிதம்பரம், மாக்சிம் வாச்சியர் லாக்ரேவ்வை எதிர்கொள்கிறார்.
சாலஞ்சர்ஸ் பிரிவு முதல் சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.வைஷாலி, லியோன் மெண்டோன்காவுடன் மோதினார். இதில் 30-வது நகர்த்தலின் போது வைஷாலி அதிர்ச்சிதோல்வி அடைந்தார்.
அதேவேளையில் ஹரிகா துரோணவல்லி, பிரணவை எதிர்கொண்டார். இதில் 63-வது நகர்த்தலின் போது ஹரிகா துரோணவல்லி தோல்வி அடைந்தார்.
ரவுனக் சத்வானி, கார்த்திகேயன் முரளியுடன் மோதினார். இதில் 69-வது காய் நகர்த்தலில் ரவுனக் சத்வானி வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர், முழுமையாக ஒரு புள்ளியை வசப்படுத்தினார். பிரனேஷ், அபிமன்யு புராணிக்கை சந்தித்தார். இதில் அபிமன்யு 46-வது காய் நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர், முழுமையாக ஒரு புள்ளியை வசப்படுத்தினார்.
7 சுற்றுகள் கொண்ட சாலஞ்சர்ஸ் பிரிவில் முதல் சுற்றின் முடிவில் அபிமன்யு புராணிக், லியோன் மெண்டோன்கா, ரவுனக் சத்வானி, பிரணவ் ஆகியோர் தலா ஒரு புள்ளிகளை பெற்று முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
சாலஞ்சர்ஸ் பிரிவில் 2-வது நாளான இன்று (நவம்பர் 6-ம் தேதி) 2-வது சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் லியோன் மெண்டோன்கா, ஹரிகா துரோண வல்லியுடன் மோதுகிறார். அபிமன்யு புராணிக், பிரணவை எதிர்கொள்கிறார். கார்த்திக்கேயன் முரளி, பிரனேஷுடன் பலப்பரீட்சை நடத்துகிறார். ஆர்.வைஷாலி, ரவுனக் சத்வானியை சந்திக்கிறார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
38 mins ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago