உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தை இழந்துள்ளது.
நியூஸிலாந்துக்கு எதிரான தொடருக்கு முன்பு வரை இந்திய அணி அதிக புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தது. இந்நிலையில் தொடரை 0-3 என்ற கணக்கில் முழுமையாக இழந்துள்ளதால் இந்திய அணி முதலிடத்தை இழந்து 2-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்திய அணி தற்போது 58.33 புள்ளிகளுடன் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 62.50 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
இதைத் தொடர்ந்து இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் 5 போட்டிகள் கொண்ட பார்டர்- கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் 4 போட்டிகளில் வென்றால் மட்டுமே, இந்திய அணி உலக டெஸ்ட் கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு கிட்டும். இந்தியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்றியுள்ள நியூஸிலாந்து அணி 54.55 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 55.56 புள்ளிகளுடன் இலங்கை 3-வது இடத்திலும், 54.17 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா 5-வது இடத்திலும் உள்ளன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago