சென்னை: ஹாக்கி இந்தியா கூட்டமைப்பு சார்பில் ஆடவருக்கான 14-வது ஹாக்கி சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் வரும் நவம்பர் 4-ம் தேதி தொடங்குகிறது. 16-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் 31 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியனான பஞ்சாப், தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ, சத்தீஸ்கர் ஆகிய 3 அணிகள் உள்ளன. ‘பி’ பிரிவில் ஹரியானா, தெலங்கானா, இமாச்சல் பிரதேசம், மிசோரம் அணிகளும் ‘சி’ பிரிவில் தமிழ்நாடு, மத்திய பிரதேசம், ஆந்திரா, அந்தமான் மற்றும் நிக்கோபார் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
‘டி’ பிரிவில் கர்நாடகா, சண்டிகர், உத்தராகண்ட், திரிபுரா ஆகிய அணிகளும், ‘இ’ பிரிவில் ஒடிசா, புதுச்சேரி, ராஜஸ்தான், அருணாச்சல பிரதேசம் அணிகளும், ‘எஃப்’ பிரிவில் உத்தரபிரதேசம், டெல்லி, கேரளா, ஜம்மு மற்றும் காஷ்மீர் அணிகளும், ‘ஜி’ பிரிவில் ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, கோவா, குஜராத் ஆகிய அணிகளும், ‘ஹெச்’ பிரிவில் மணிப்பூர், பெங்கால், பிஹார், அசாம் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறும். லீக் சுற்றில் மொத்தம் 45 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. தொடரின் தொடக்க ஆட்டத்தில் 4-ம் தேதி காலை 7 மணிக்கு ’எஃப்’ பிரிவில் இடம் பெற்றுள்ள உத்தரபிரதேசம் - கேரளா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
பிற்பகல் 3.45 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தொடரை நடத்தும் தமிழ்நாடு, ஆந்திராவை எதிர்கொள்கிறது. தமிழ்நாடு அணி தனது 2-வது ஆட்டத்தில் 5-ம் தேதி மத்திய பிரதேசத்துடனும், கடைசி லீக் ஆட்டத்தில் 7-ம் தேதி அந்தமான் மற்றும் நிக்கோபார் அணியையும் சந்திக்கிறது. நடப்பு சாம்பியனும் 4 முறை கோப்பையை வென்றுள்ள பஞ்சாப் அணி தனது முதல் ஆட்டத்தில் 5-ம் தேதி, சத்தீஸ்கருடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
லீக் ஆட்டங்கள் 11-ம் தேதி நிறைவடைகின்றன. 12-ம் தேதி ஓய்வு நாளாகும். இதைத் தொடர்ந்து 13-ம் தேதி கால் இறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதன் பின்னர் ஒருநாள் ஓய்வுக்குப் பின்னர் 15-ம் தேதி அரை இறுதி ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி 16-ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக அன்றைய நாளில் பிற்பகல் 2 மணி அளவில் 3-வது இடத்துக்கான போட்டி நடைபெறும்.
தமிழ்நாடு அணி..
ஹாக்கி சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இதுவரை நடைபெற்றுள்ள 13 தொடர்களில் தமிழ்நாடு அணி அதிகபட்சமாக 2022-ம் ஆண்டு 2-வது இடமும், 2023-ம் ஆண்டு 3-வது இடமும் பிடித்திருந்தது
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 mins ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago