ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: பஞ்சாப் - சென்னை இன்று மோதல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லியில் உள்ள நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் எஃப்சி - சென்னையின் எஃப்சி அணிகள் மோதுகின்றன.

பஞ்சாப் எப்ஃசி அணி 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒருதோல்வியுடன் 9 புள்ளிகளை பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் சென்னையின் எப்ஃசி அணி 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 டிரா,ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

ஐஎஸ்எல் தொடரில் பஞ்சாப் எஃப்சி, சென்னையின் எஃப்சி அணிகள் இதுவரை 2 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவுசெய்துள்ளன.

சென்னையின் எஃப்சி தலைமை பயிற்சியாளர் ஓவன் கோய்ல் கூறும்போது, “ஒவ்வொரு ஆட்டத்தையும் வெல்ல முடியும் என்று எனது வீரர்கள் நம்ப வேண்டும் . அது சாத்தியமில்லை. ஆனால் நோக்கம் எப்போதும் இருக்க வேண்டும், அந்த வகையான வீரர்களுடன் நான் பணியாற்ற விரும்புகிறேன்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்