விஜய் சங்கர் சதம் விளாசல்: சத்தீஸ்கருக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்தது தமிழ்நாடு அணி

By செய்திப்பிரிவு

கோவை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘டி’ பிரிவில் உள்ள சத்தீஸ்கர் - தமிழ்நாடு அணிகள் இடையிலான ஆட்டம் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் சத்தீஸ்கர் 500 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய தமிழ்நாடு 77.2 ஓவர்களில் 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது பாலோ-ஆன் ஆனது.

இதையடுத்து 241 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தமிழ்நாடு அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 76 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது.

கேப்டன் நாராயணன் ஜெகதீசன் 60, ஆந்த்ரே சித்தார்த் 41, பூபதி குமார் 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். விஜய் சங்கர் 165 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 106 ரன்கள் விளாசியும், பிரதோஷ் ரஞ்ஜன் பால் 73 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 39 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். விஜய் சங்கருக்கு இது முதல் தர கிரிக்கெட்டில் 10-வது சதமாக அமைந்தது. அவரது சிறப்பான ஆட்டம் காரணமாக தமிழ்நாடு அணி ஆட்டத்தை டிராவில் முடித்தது.

எனினும் பாலோ ஆன் பெற்றதால் ஆட்டத்தை டிராவில் முடித்தாலும் தமிழ்நாடு அணிக்கு ஒரு புள்ளி மட்டுமே கிடைத்தது. 3 ஆட்டங்களில் விளையாடி உள்ள தமிழ்நாடு அணி ஒரு வெற்றி, 2 டிராவுடன் 11 புள்ளிகளை பெற்று தனது பிரிவில் 3-வது இடத்தில் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்