புதுடெல்லி: சேதேஷ்வர் புஜாரா போன்ற வீரர்கள் அணியில் இல்லாததால் தோல்வி அடைந்து வருகிறோம் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நியூஸிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் வரும் நவம்பர் 1-ம் தேதி தொடங்க உள்ளது.
இதனிடையே, தொடர்ந்து 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி தோல்வி கண்டது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறியதாவது: நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி தோல்வி கண்டது. தற்போது விளையாடி வரும் இந்திய அணியில் உள்ள வீரர்கள் களத்தில் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாட முடியவில்லை.
சவாலான நேரங்களில் பொறுமையுடன் தற்காப்பு ஆட்டம் விளையாடி விக்கெட்டை காப்பாற்றும் வீரர்கள் அணியில் இல்லாதது பெருங்குறை. சேதேஷ்வர் புஜாரா, ரஹானே போன்ற வீரர்கள் களத்தில் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடக் கூடியவர்கள். புஜாரா போன்ற வீரர்கள் அணியில் இல்லாதது பெரும் குறையாக உள்ளது. புஜாரா போன்ற வீரர்கள் இல்லாததால்தான் இந்த தொடரில் நாம் தோல்வி கண்டுள்ளோம்.
» உலக டேபிள் டென்னிஸ்: மணிகா பத்ரா தோல்வி
» விஜய் கட்சிக் கொள்கை எங்களது கொள்கைக்கு நேரெதிரானது: சீமான் கருத்து
பொறுமையான ஆட்டம், தற்காப்பு பாணியிலான ஆட்டம்தான் கடினமான சூழ்நிலைகளில் இந்திய அணிக்கு முதுகெலும்பாக இருந்தது. பொறுமையாக விளையாடி எதிரணிக்கு அழுத்தம் தரும் திறன் தற்போதைய அணி வீரர்களிடம் இல்லை.
புஜாரா, அஜிங்க்ய ரஹானே போன்ற வீரர்களை நாம் தவறவிடுகிறோமா? இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்தின் முன் உள்ள மிகப்பெரிய கேள்வி இது.
பல நெருக்கடியான நேரங்களில் பலம் மிகுந்த அணியின் தாக்குதல் பந்துவீச்சையும் தடுத்து நிறுத்தி விளையாடியவர் புஜாரா. எப்போதாவது ஒருமுறை ஆக்ரோஷமாக விளையாடுவதன் மூலமாக விக்கெட் சரிவை தடுக்க முடியும். ஆனால் ஒவ்வொரு முறையும் அந்த அணுகுமுறையை கையாண்டால் சரிவை தடுக்க முடியாது. நீங்கள் டெஸ்ட் போட்டியின்போது செஷன் செஷனாக விளையாட வேண்டும். இதைத்தான் வீரர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. நீங்கள் விக்கெட்டை இழக்காமல் ஒவ்வொரு செஷனையும் விளை யாடத் தெரிந்திருக்க வேண்டும்.
நாம் 2001-ம் ஆண்டை, டெஸ்ட் கிரிக்கெட்டில் நமக்கு இணையற்ற ஆண்டு, பொற்காலம் என்று பேசி வருகிறோம். அப்போது இந்திய அணி வீரர்கள், ஒரு நாள் முழுக்க விக்கெட் கொடுக்காமல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடி வரலாற்று வெற்றியை பெற்றது.
பிறகு ஆஸ்திரேலியா சென்று அங்கும் ஒரு நாள் முழுவதும் விக்கெட் விட்டுக் கொடுக்காமல் விளையாடி சாதனை படைத்தோம். ஆனால் தற்போது ஆடுகளத்தில் சிறிதளவு சவால் இருந்தால் கூட ஒரு செஷன் முழுவதும் விக்கெட் விழாமல் விளையாட முடியாத நிலையில் இருக்கிறோம்.
தொடக்கத்தில் விக்கெட்கள் விழும்போது அடுத்து விளையாட வரும் வீரர்கள் சரிவை தடுத்து நிறுத்துவது போன்று விளையாட வேண்டும். அதே நேரத்தில் ஸ்கோர் போர்டில் ரன் கணக்கும் ஏறவேண்டும். அதுபோன்ற வீரர்தான் நமக்கு அவசியம் தேவை.
விக்கெட் விழாமல் தடுத்து அந்த செஷன் முழுவதையும் நகர்த்துவதற்கு தெரிந்த வீரர் அணிக்கு அவசியம் தேவை. இதனால் எதிரணி பந்துவீச்சாளர்கள் சோர்வடைந்து விடுவர். இதனால் ரன் குவிக்கும் வகையில் பந்துகள் பேட்டுக்கு வரும். அப்போது வெற்றியும் நமது வசமாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago