வாஷிங்டன் சுந்தர் அசத்தல் முதல் தடுமாறும் ரோஹித் வரை @ IND vs NZ புனே டெஸ்ட்

By செய்திப்பிரிவு

புனே: இந்தியாவுக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வாஷிங்டன் சுந்தர் அபாரமாக பந்துவீசி 7 விக்கெட்களைச் சாய்த்தார்.

பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் புனேவில் 2-வது போட்டி நேற்று தொடங்கியது. இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. கே.எல்.ராகுல், முகமது சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு ஷுப்மன் கில், ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

டாஸை வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் லதாமும், டேவிட் கான்வேயும் களமிறங்கினர். 15 ரன்களில் லதாம் வீழ்ந்தார். வில் யங் 18 ரன்கள் சேர்த்தார். டேவன் கான்வே 141 பந்துகளில் 76 ரன்கள் (11 பவுண்டரிகள்) சேர்த்து அஸ்வின் பந்தில் வீழ்ந்தார். அதன் பின்னர் வந்தவர்களில் ரச்சின் ரவீந்திரா 65 (105 பந்துகள், 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர்), மிட்செல் சான்ட்னர் 33 ரன்கள் சேர்த்தனர். நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

வாஷிங்டன் சுந்தர் 7, ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்களை வீழ்த்தினர். பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி தொடக்கத்திலேயே கேப்டன் ரோஹித்தின் விக்கெட்டை இழந்தது. அவர் ரன் கணக்கைத் தொடங்காமலேயே வீழ்ந்தார். முதல் நாள் ஆட்டநேர இறுதியில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு
16 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால், 6, ஷுப் மன் கில் 10 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

கேப்டனின் நம்பிக்கையை காப்பாற்றிய சுந்தர்: முதல் டெஸ்டில் விளையாடிய குல்தீப் யாதவை நீக்கிவிட்டு, வாஷிங்டன் சுந்தரின் மீது நம்பிக்கை வைத்து 2-வது டெஸ்டில் விளையாட, அவருக்கு கேப்டன் ரோஹித் சர்மா வாய்ப்பு வழங்கினார். இதையடுத்து கேப்டனின் நம்பிக்கையைக் காப்பாற்றிய வாஷிங்டன் சுந்தர் தனது அபாரமான ஆப்-ஸ்பின் பந்துவீச்சால் 7 விக்கெட்களை கொத்தாக அள்ளினார். ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் என்ற நிலையில் வலுவாக நியூஸிலாந்து அணி இருந்தது. அதன் பின்னர் வெறும் 62 ரன்களுக்கு கடைசி 7 விக்கெட்களையும் நியூஸிலாந்து இழந்தது. இந்த 7 விக்கெட்களையும் சுந்தர் கைப்பற்றி, நியூஸிலாந்து அணியின் சரிவுக்குக் காரணமானார்.

சவுதி பந்தில் தொடர்ந்து தடுமாறும் ரோஹித்: நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதியின் பந்துவீச்சில், ரோஹித் சர்மா தொடர்ந்து தடுமாறி தனது விக்கெட்டையும் பறிகொடுத்து வருகிறார். ரோஹித் சர்மாவுக்கு எதிராக 8 இன்னிங்ஸ்களில் 126 பந்துகளை வீசியுள்ள சவுதி 51 ரன்களைக் கொடுத்துள்ளார். அதே நேரத்தில் ரோஹித்தின் விக்கெட்டை 4 முறை அவர் சாய்த்துள்ளார்.

முதலாவது 5 விக்கெட்: வாஷிங்டன் சுந்தர் முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் நியூஸிலாந்துக்கு எதிராக 4-வது சிறந்த பந்துவீச்சையும் அவர் பதிவு செய்துள்ளார். இதற்கு முன்பு 1965-ல் நியூஸி. அணிக்கு எதிராக எஸ். வெங்கட்ராகவன் 8 விக்கெட்களையும், 1975-ல் பிரசன்னா 76 ரன்களுக்கு 8 விக்கெட்களையும், 2017-ல் அஸ்வின் 59 ரன்களுக்கு 7 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர். தற்போது சுந்தர் 59 ரன் களுக்கு 7 விக்கெட்களை அள்ளியுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக விக்கெட்: நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 3 விக்கெட்களை வீழ்த்தினார். அவர் 2-வது விக்கெட்டாக வில் யங்கை வீழ்த்தியபோது புதிய சாதனையை படைத்தார். இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக விக்கெட்டை வீழ்த்தியவர் என்ற பெருமையைப் பெற்றார் அஸ்வின். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரிசையில் நடைபெறும் 39 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் இதுவரை 188 விக்கெட்களை கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய வீரர் நேதன் லயன் 187 விக்கெட்களுடன் 2-வது இடத்திலும், பாட் கம்மின்ஸ் 175 விக்கெட்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். மேலும், 104 போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 531 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் அதிக விக்கெட் எடுத்த வீரர் வரிசையில் 7-வது இடத்தில் உள்ள நேதன் லயனை அஸ்வின் முந்தியுள்ளார்.

7-வது இடத்தில் அஸ்வின்


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்