புனே: இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூஸிலாந்து 259 ரன்களைச் சேர்த்தது. இதில் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக பந்துவீசி பேட்ஸ்மேன்களை திணறடித்தனர். தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 16 ரன்களைச் சேர்த்தது.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமறங்கிய டாம் லேதம் 15 ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த வில் யங் 18 ரன்களில் விக்கெட்டானார்.
டெவோன் கான்வே - ரச்சின் ரவீந்திரா சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 76 ரன்களை சேர்த்த டெவோன் கான்வே விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். 65 ரன்களை சேர்த்த ரச்சின் ரவீந்திரா விக்கெட்டை வாஷிங்டன் சுந்தர் கைப்பற்றினார். அதன் பிறகு பெரிய அளவில் யாரும் ரன்களைச் சேர்க்கவில்லை. டாம் ப்ளெண்டல் 3 ரன்கள், டேரில் மிட்செல் 18 ரன்கள், க்ளன் பிலிப்ஸ் 9 ரன்கள், டிம் சவுதி 5 ரன்கள், அஜாஸ் படேல் 4 ரன்கள் இறுதியில் 33 ரன்களைச் சேர்த்த மிட்செல் சாட்னர் அவுட்டாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூஸிலாந்து 259 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா 3வது ஓவரில் டக்அவுட்டாகி வெளியேறினார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 6 ரன்களுடனும், ஷூப்மன் கில் 10 ரன்களுடனும் களத்தில் இருக்க முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.11 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 16 ரன்களைச் சேர்த்தது இந்திய அணி. இரண்டாம் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 243 ரன்கள் பின்தங்கியது.
வாஷிங்டன் சுந்தர் மிரட்டல்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெறாத நிலையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் அவர் சேர்க்கப்பட்டார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்தை திணற செய்தார். 59 ரன்களை கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மாஸ் காட்டினார்.
» அஸ்வின் அபாரம்; வாஷிங்டன் சுந்தர் அற்புதம் @ IND vs NZ புனே டெஸ்ட்
» வங்கதேசத்தை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 4-ம் இடம் பிடித்த தென் ஆப்பிரிக்கா!
அஸ்வின் சாதனை: அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 531-வது விக்கெட்டை கைப்பற்றினார். டாம் லேதம், வில் யங் மற்றும் கான்வே என மூவரையும் அவர் வெளியேற்றினார். இதில் கான்வேவின் விக்கெட் அவரது 531-வது விக்கெட்டாக அமைந்தது. இதன் மூலம் அதிக விக்கெட் வீழ்த்திய ஆல் டைம் டெஸ்ட் கிரிக்கெட் பவுலர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் லயனை அவர் முந்தியுள்ளார். தற்போது அந்த பட்டியலில் அஸ்வின் 7-ம் இடத்தில் உள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago