புனே: நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஃப் ஸ்பின்னர்களான அஸ்வினும், வாஷிங்டன் சுந்தரும் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர்.
இருவரும் முதல் நாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸில் முதல் 8 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதில் நியூஸிலாந்து அணிக்கு நம்பிக்கை அளித்த கான்வே மற்றும் ரச்சின் விக்கெட்டுகள் அடங்கும். அஸ்வின், கான்வேவை வெளியேற்றினார். வாஷிங்டன் சுந்தர், ரச்சின் ரவீந்திராவை போல்ட் செய்தார். வாஷிங்டன் சுந்தர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
அஸ்வின் சாதனை: அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 531-வது விக்கெட்டை கைப்பற்றினார். டாம் லேதம், வில் யங் மற்றும் கான்வே என மூவரையும் அவர் வெளியேற்றினார். இதில் கான்வேவின் விக்கெட் அவரது 531-வது விக்கெட்டாக அமைந்தது. இதன் மூலம் அதிக விக்கெட் வீழ்த்திய ஆல் டைம் டெஸ்ட் கிரிக்கெட் பவுலர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் லயனை அவர் முந்தியுள்ளார். தற்போது அந்த பட்டியலில் அஸ்வின் 7-ம் இடத்தில் உள்ளார்.
வாஷிங்டன் சுந்தர்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெறாத நிலையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் அவர் சேர்க்கப்பட்டார். புனேவில் நடைபெறும் இரண்டாவது போட்டியின் ஆடும் லெவனில் இடம் பிடித்த வாஷி, தனது பந்து வீச்சால் நியூஸிலாந்தை திணற செய்து வருகிறார். அரை சதம் கடந்த ரச்சின் ரவீந்திரா, டாம் பிளெண்டல், மிட்செல், கிளென் பிலிப்ஸ், டிம் சவுதி ஆகியோரது விக்கெட்டை அவர் கைப்பற்றி உள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago