வங்கதேசத்தை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 4-ம் இடம் பிடித்த தென் ஆப்பிரிக்கா!

By ஆர்.முத்துக்குமார்

மிர்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்தை 7 விக்கெட்டுகளில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

இதோடு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் நியூஸிலாந்தை பின்னுக்குத் தள்ளி 4-ம் இடத்தைப் பிடித்துள்ளது தென் ஆப்பிரிக்கா. மிர்பூரில் இன்று வெற்றி பெறத் தேவையான 106 ரன்களைத் தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட்டுகளை இழந்து 22 ஓவர்களில் எடுத்து அபார வெற்றி பெற்றது. வங்கதேசம் தன் 2-வது இன்னிங்ஸில் மெஹதி ஹசன் மிராஸின் அற்புதமான போராட்ட 97 ரன்கள் மற்றும் டெய்ல் எண்டர் ஜேகர் அலியின் 58 ரன்களாலும் 308 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.

ககிசோ ரபாடா 17.5 ஓவர்களில் 4 மெய்டன்களுடன் 46 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் என்று மொத்தம் 9 விக்கெட்டுகளைச் சாய்த்து வெற்றி பெற்றாலும் ஆட்ட நாயகன் விருது முதல் இன்னிங்ஸில் 114 ரன்கள் எடுத்த கைல் வெரைனுக்கு வழங்கப்பட்டது ஆச்சரியம் தான்.

துணைக் கண்டத்தில் கடந்த 15 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா பெறும் முதல் வெற்றி இதுவே. 2014-ல் காலேயில் இலங்கையை வீழ்த்திய பிறகு ஆசியாவில் இப்போதுதான் வெற்றி பெறுகிறது. அப்போது டேல் ஸ்டெய்ன் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இப்போது ரபாடா.

கடந்த 16 ஆண்டுகளில் வங்கதேசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி இருமுறை ஆடியுள்ளது. 2015-ல் ஒருமுறை 2 போட்டிகளுமே மழையினால் நடைபெறாமல் போனது. 2008-ம் ஆண்டு வங்கதேசத்தில் 2 போட்டிகளிலுமே இன்னிங்ஸ் வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்கா.

நடப்புத் தொடரில் 2வது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் அடுத்த வாரம் செவ்வாயன்று நடைபெறுகிறது. இது முடிந்து தென் ஆப்பிரிக்கா தங்கள் சொந்த மண்ணில் இலங்கையுடன் 2 டெஸ்ட் போட்டிகளிலும் பாகிஸ்தானுடன் 2 போட்டிகளிலும் ஆடுகிறது, இதில் வென்றால் நிச்சயம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் மேலும் முன்னேறும்.

அதாவது இன்னும் இருக்கும் 5 டெஸ்ட் போட்டிகளில் 4-ல் வென்றால் தென் ஆப்பிரிக்கா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்