கைல் வெரெய்ன் சதம் விளாசல்: தென் ஆப்பிரிக்கா 308 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

By செய்திப்பிரிவு

மிர்பூர்: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 308 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. கைல் வெரெய்ன் சதம் விளாசி அசத்தினார்.

மிர்பூர் நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 40.1 ஓவரில் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மஹ்மதுல் ஹசன் ஜாய் 30, தைஜூல் இஸ்லாம் 16, மெஹிதி ஹசன் 13, முஸ்பிகுர் ரஹிம் 11 ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் வியான் முல்டர், காகிசோ ரபாடா, கேசவ் மகாராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதையடுத்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 41 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. கேப்டன் எய்டன் மார்க்ரம் 6, டோனி டி ஸோர்ஸி 30, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 23, டேவிட் பெலிங்ஹாம் 11, ரியான் ரிக்கெல்டன் 27, மத்தேயு பிரீட்ஸ்கே 0 ரன்களில் வெளியேறினர். கைல் வெரெய்ன் 18, வியான் முல்டர் 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தென் ஆப்பிரிக்க அணி தொடர்ந்து விளையாடியது. தனது முதல் அரை சதத்தை கடந்த வியான் முல்டர் 112 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்த நிலையில் ஹசன் மஹ்மூத் பந்தில் ஆட்டமிழந்தார். 7-வது விக்கெட்டுக்கு வியான் முல்டர் - கைல் வெரெய்ன் ஜோடி 119 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய கேசவ் மகாராஜ் 0, டேன் பயட் 32 ரன்களில் நடையை கட்டினர்.

தனது 2-வது சதத்தை விளாசிய கைல் வெரெய்ன் 144 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 114 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி வீரராக மெஹிதி ஹசன் பந்தில் ஸ்டெம்பிங் முறையில் வெளியேற தென் ஆப்பிரிக்க அணி 88.4 ஓவர்களில் 308 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. காகிசோ ரபாடா 2 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

வங்கதேச அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் தைஜூல் இஸ்லாம் 5 விக்கெட்களை வீழ்த்தினார். ஹசன் மஹ்மூத் 3, மெஹிதி ஹசன் 2 விக்கெட்களை கைப்பற்றினர். 202 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடத் தொடங்கிய வங்கதேச அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 27.1 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்தது.

ஷத்மான் இஸ்லாம் 1, மொமினுல் ஹக் 0 ரன்களில் ரபாடா பந்தில் ஆட்டமிழந்தனர். நிதானமாக விளையாடிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 49 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்த நிலையில் கேசவ் மகாராஜ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். மஹ்முதுல் ஹசன் ஜாய் 80 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 38 ரன்களும், முஸ்பிகுர் ரஹிம் 26 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 31 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். கைவசம் 7 விக்கெட்கள் இருக்க 101 ரன்கள் பின்தங்கியுள்ள வங்கதேச அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்