பாரீஸ் நகரில் நடந்து வரும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில் ரஷ்ய வீராங்கனை ஷரபோவாவுடன் மோதலுக்கு சில நிமிடங்களுக்கு முன் போட்டியில் இருந்து விலகுவதாக அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அறிவித்தார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. திருமணத்துக்குப் பின் குழந்தை பெற்று முன்னாள் சாம்பியனும், அமெரிக்க வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் இந்த முறை விளையாட வந்திருப்பதால், மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கு ஏற்றார்போல், செரீனாவும் 3சுற்றுகள் வரை தனது வழக்கமான ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று வந்தார்.
3-வது சுற்றில் ஜெர்மன் வீராங்கனை ஜோர்ஜஸை 3-6, 3-6 என்ற நேர் செட்களில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு செரீனா தகுதி பெற்றார். மகளிர் ஒற்றையருக்கான 4-வது சுற்று ஆட்டங்கள் இன்று நடப்பதாக இருந்தது.
இதில் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவாவை எதிர்த்து செரீனா வில்லியம்ஸ் மோதுவதாக இருந்தது. இரு வீராங்கனைகளும் முன்னாள் சாம்பியன்கள் என்பதால், மிகுந்த எதிர்பார்ப்பை இந்த ஆட்டம் ஏற்படுத்தி இருந்தது. அதுமட்டுமல்லாமல், ஊக்கமருந்து சர்ச்சையில் ஷரபோவா சிக்கி, தடைக்குபின் விளையாட வந்திருப்பதால், அவரின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருந்தது.
இதற்கிடையே ஷரபோவா சமீபத்தில் எழுதிய தனது புத்தகத்தில் செரீனா மீது பல்வேறு புகார்களைக் கூறி இருந்தார். ஆனால் அந்தப் புகார்களை எல்லாம் செரீனா மறுத்தநிலையில், அது அனைத்தும் கட்டுக்கதைகள் என்று விமர்சித்து இருந்தார். இதனால்,இருவருக்கும் இடையிலான இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், போட்டி தொடங்குவதற்து சில நிமிடங்களுக்கு முன் விலகுவதாக திடீரென செரீனா வில்லியம்ஸ் அறிவித்தார். தன்னுடைய மார்புப்பகுதியில் தசைப்படிப்பு ஏற்பட்டுள்ளதால், தொடர்ந்துவிளையாட முடியாத சூழலில் இருப்பதால், விலகுவதாக அறிவித்தார். அதுமட்டுமல்லாமல்,முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போட்டியில் இருந்து நான் விலகியது எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது என்று செரீனா தெரிவித்தார்.
செரீனாவுக்கு ஏற்பட்ட காயம் எப்போது குணமடையும், அடுத்து நடைபெறவுள்ள விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பங்கேற்பாரா என்பது குறித்த எந்த அறிவிப்பும் இல்லை.
கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து ரஷிய வீராங்கனை மரியா ஷரபோவாவுடன் மோதிய அனைத்துப் போட்டிகளிலும் செரீனா வெற்றி பெற்றுள்ளார் என்பதால், இந்தப் போட்டி மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. செரீனா விலகியதால், ஷரபோவா நேரடியாக காலிறுதிக்கு தகுதிபெற்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago