மிர்பூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வியான் முல்டர், ரபாடா வேகத்தில் 106 ரன்களுக்கு சுருண்டது வங்கதேச அணி

By செய்திப்பிரிவு

மிர்பூர்: எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி மிர்பூர் நகரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேச அணியானது வியான் முல்டர், காகிசோ ரபாடா ஆகியோரது வேகப்பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் மளமளவென விக்கெட்களை பறிகொடுத்தது.

ஷத்மான் இஸ்லாம் (0), மொமினுல் ஹக் (4), கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (7) ஆகியோர் வியான் முல்டர் பந்தில் நடையை கட்டினர். இவர்களை தொடர்ந்து முஸ்பிகுர் ரஹிம் 11 ரன்னிலும், லிட்டன் தாஸ் ஒரு ரன்னிலும் காகிசோ ரபாடா பந்தில் ஆட்டமிழந்தனர். மெஹிதி ஹசன் 24 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 13 ரன்கள் எடுத்த நிலையில் கேசவ் மகாராஜ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். 60 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்த வங்கதேச அணியால்அதன் பின்னர் மீள முடியாமல் போனது.

சற்று தாக்குப்பிடித்து விளையாடிய தொடக்க வீரரான மஹ்மதுல் ஹசன் ஜாய் 97 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்த நிலையில் டேன் பயட்டின் சுழற்பந்து வீச்சில் போல்டானார். அவரைத் தொடர்ந்து ஜாகர் அலி ஒரு ரன்னில் கேசவ் மகாராஜ் பந்தில் ஸ்டெம்பிங் ஆனார். நயீம் ஹசன் 8, தைஜூல் இஸ்லாம் 16 ரன்களில் வெளியேற முடிவில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 40.1 ஓவரில் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் வியான் முல்டர், காகிசோ ரபாடா, கேசவ் மகாராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியும் சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தது. எய்டன் மார்க்ரம் 6 ரன்னில் ஹசன் மஹ்மூத் பந்தில்போல்டானார். டோனி டி ஸோர்ஸி 30, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 23, டேவிட்பெலிங்ஹாம் 11, ரியான் ரிக்கெல்டன் 27, அறிமுக வீரரான மத்தேயு பிரீட்ஸ்கே 0 ரன்களில் தைஜூல் இஸ்லாம் சுழலில் நடையை கட்டினர்.

இதையடுத்து களமிறங்கிய கைல் வெரெய்ன், வியான் முல்டர்ஜோடி சீராக ரன்கள் சேர்த்தது. முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 41 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. கைல் வெரெய்ன்18, வியான் முல்டர் 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேச அணி தரப்பில் தைஜூல் இஸ்லாம் 5 விக்கெட்களை வீழ்த்தினார். கைவசம் 4 விக்கெட்கள் இருக்க 34 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.

‘ரபாடா 300’: மிர்பூர் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியின் முஸ்பிகுர் ரஹிமை (11), தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா ஆட்டமிழக்கச் செய்தார். சர்வேதச டெஸ்ட்அரங்கில் ரபாடா கைப்பற்றிய 300-வது விக்கெட்டாக இது அமைந்தது. 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள ரபாடா இதுவரை 302 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் 300 விக்கெட்களுக்கு மேல் கைப்பற்றிய 6-வது தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார் ரபாடா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

42 mins ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்