மொ
ராக்கோ அணி 20 வருடங்களுக்குப் பிறகு தற்போது உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. அட்லஸ் லயன்ஸ் என செல்லமாக அழைக்கப்படும் மொராக்கோ அணி இதற்கு முன்னர் 4 முறை உலகக் கோப்பை தொடரில் விளையாடி உள்ளது. 1970, 1994, 1998 ஆகிய ஆண்டுகளில் முதல் சுற்றுடன் வெளியேறிய மொராக்கோ 1986 உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றுவரை முன்னேறி ஆச்சர்யம் கொடுத்தது.
மொராக்கோ அணி இம்முறை ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இந்த பிரிவில் 2010-ம் ஆண்டு சாம்பியனான ஸ்பெயின், ஐரோப்பிய சாம்பியனான போர்ச்சுக்கல், ஈரான் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. இதனால் மொராக்கோ அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கு கடுமையாக போராட வேண்டியதிருக்கும். இதற்கு தகுந்தபடியே அந்த அணி சிறந்த முறையில் தயாராகியிருப்பதாக கருதப்படுகிறது. கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது அந்த அணி தற்காப்பு ஆட்டத்தை கையில் எடுக்கும் பாணியை சமீபகாலமாக கடைப்பிடித்து வருகிறது.
தகுதி சுற்றில் கடைசி கட்டத்தில் மொராக்கோ அணி 6 ஆட்டங்களில் ஒன்றில் கூட தோல்வியை சந்திக்கவில்லை. இதில் அந்த அணி 3 ஆட்டங்களை கோல்களின்றி டிராவில் முடித்த நிலையில் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. இந்த 3 ஆட்டங்களில் 11 கோல்களை அடித்த மொராக்கோ அணி ஒரு கோல் கூட வாங்கவில்லை என்பதுதான் சிறப்பம்சம். தொழில்ரீதியான போட்டிகளில் ஜூவென்டஸ் கிளப் அணிக்காக விளையாடி வரும் 31 வயதான மெதி பெனட்டியா ‘சென்டர் பேக்’ பொசிஷனில் சிறப்பாக விளையாடும் திறன் கொண்டவர். களத்திலும், களத்துக்கு வெளியேயும் சிறந்த பண்புகளை கொண்ட அவரை அணி நிர்வாகம் பெரிதும் நம்பி உள்ளது. இதேபோல் பேக் லைனில் கரீம் எல் அஹ்மதி அசத்தக் கூடியவர்.
முன்களத்தில் அசத்தக்கூடிய வீரராக 25 வயதான ஹக்கிம் ஸியெக் உள்ளார். தாக்குதல் ஆட்டம் தொடுக்கும் திறன் கொண்ட அவர், நெதர்லாந்து கிளப் அணிக்காக இந்த சீசனில் 15 கோல்கள் அடிக்க உதவி செய்துள்ளார். மேலும் தகுதி சுற்று ஆட்டத்தில் மொராக்கோ அணி 6-0 என மாலி அணியை பந்தாடிய ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்து முக்கிய பங்களிப்பு செய்திருந்தார். இதேபோல் வளர்ந்து வரும் வீரரான அச்ராஃப் ஹக்கிமியும் அனைவரது கவனத்தையும் ஈர்க்க காத்திருக்கிறார். சமீபத்தில் சாம்பியன்ஸ் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ரியல் மாட்ரிட் அணியில் அச்ராஃப் ஹக்கிமியும் அங்கம் வகித்தார். தகுதி சுற்றில் கபான் அணிக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்த காலித் பியூட்டிப், இந்த சீசனில் துருக்கி லீக் கால்பந்து தொடரில் 12 கோல்கள் அடித்து சிறந்த பார்மில் உள்ளார்.
1986 உலகக் கோப்பையில் மொராக்கோ அணி லீக் சுற்றில் இங்கிலாந்து, போலந்து அணிகளுக்கு எதிரான ஆட்டத்தை கோல்களின்றி டிராவில் முடித்த நிலையில் பலம் வாய்ந்த போர்ச்சுக்கல் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தனது பிரிவில் முதலிடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியிருந்தது. இம்முறை நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ அங்கம் வகிக்கும் போர்ச்சுக்கல் அணியை மொராக்கோ அணி வீழ்த்துவது அவ்வளவு எளிதானதாக இருக்காது. எனினும் கால்பந்தில் எதுவேண்டுமானாலும் நடைபெறலாம். காத்திருப்போம் கால்களின் திருவிழா தொடங்கும் வரை.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago