நாக் அவுட் தகராறில் மெக்சிகோ

By பெ.மாரிமுத்து

பி

ரேசில், ஜெர்மனி ஆகிய அணிகளுக்கு பிறகு கடந்த 6 உலகக் கோப்பை தொடர்களிலும் முதல் சுற்றை கடந்த ஒரே அணி மெக்சிகோ மட்டுமே. எனினும் இந்த 6 தொடர்களில் மெக்சிகோ அணி நாக் அவுட் சுற்றுகளை கடந்தது இல்லை. அந்த அணி, லீக் சுற்றுகளில் சிறப்பாக விளையாடும் நிலையில் 4-வது ஆட்டமான நாக் அவுட்டில் தேர்ச்சி பெற முடியாமல் தவித்து வருகிறது. வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் கூட்டமைப்புகளில் வலுவானதாக திகழும் மெக்சிகோ அணி முதன்முறையாக 1930-ம் ஆண்டு அறிமுக உலகக் கோப்பைத் தொடரில் களமிறங்கியது. ரஷ்ய தொடர் அந்த அணிக்கு 16-வது உலகக் கோப்பையாகும். அதிலும் அந்த அணி தொடர்ச்சியாக 7-வது முறையாக உலகக் கோப்பை தொடரை சந்திக்கிறது.

அதிகபட்சமாக மெக்சிகோ அணி 1970 மற்றும் 1986-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடர்களில் கால் இறுதி வரை முன்னேற்றம் கண்டிருந்தது. ‘நாக் அவுட் சுற்றை தாண்டும் அதிர்ஷ்டம் கிடையாது’ என்ற விமர்சனத்துக்கு இம்முறை மெக்சிகோ அணி முடிவு கட்ட முயற்சிக்கக்கூடும். 2014-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் மெக்சிகோ அணி லீக் சுற்றில் கடினமான பிரிவில் இடம் பிடித்திருந்த போதிலும் கேமரூன், குரோஷியா அணிகளை வீழ்த்தி 7 புள்ளிகள் பெற்றது. ஆனால் இதே பிரிவில் இடம் பெற்ற பிரேசில் அணி கோல்கள் வித்தியாசத்தில் மெக்சிகோவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்திருந்தது.

அந்தத் தொடரில் மெக்சிகோ அணியின் வெற்றிக்கு நாக் அவுட் சுற்றில் நெதர்லாந்து தடை போட்டது.

ரஷ்ய உலகக் கோப்பை தொடருக்கான தகுதி சுற்றில் பனாமா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றதுமே மெக்சிகோ தனது இடத்தை உறுதி செய்துவிட்டது.

அந்தச் சூழ்நிலையில் மெக்சிகோ அணிக்கு 3 ஆட்டங்கள் மீதம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தகுதி சுற்றில் மெக்சிகோ அணி 16 ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் மட்டுமே தோல்வி கண்டிருந்தது.

அந்த அணியின் வெற்றிகளில் ஜாவியர் ஹெர்னாண்டஸ் முக்கிய பங்கு வகித்தார். தொழில்முறை போட்டிகளில் மான்செஸ்டர் யுனைட்டெடு, ரியல் மாட்ரிட், பேயர் வெலர்குசன் ஆகிய கிளப் அணிகளுக்காக சிறப்பாக விளையாடி உள்ள அவர், கோல்கம்பத்துக்கு நெருக்கமாக சென்று கோல் அடிக்கும் திறன் கொண்டவர்.

எதிரணி வீரரிடம் பந்தை பிடிகொடுக்காமல் கடத்திச் செல்வது, பாக்ஸ் பகுதிக்குள் இடைவெளியை கண்டுபிடிப்பது ஆகியவற்றிலும் உலகத்தரம் வாய்ந்த வீரராக வலம் வருகிறார் ஜாவியர் ஹெர்னாண்டஸ். மான்செஸ்டர் அணியில் அவர், நிமிடத்துக்கு சராசரியாக ஒரு கோல் அடித்துள்ளது இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் இன்றளவும் வரலாற்று சாதனையாக உள்ளது.

கோல்கம்பத்துக்கு முன் பாக ஜாவியர் ஹெர்னாண்டஸ் செயல்படும் திறன் குறித்து ஜெர்மனி அணியின் ஜாம்பவானான ருடி வோலர் கூறும்போது, “கோல்கம்பத்துக்கு முன்பாக அவர் ஒவ்வொரு முறையும் வெற்றி கண்டதில்லை. ஆனால் பந்து எந்த இடத்துக்கு வந்து சேரும் என்ற அறிவை கொண்டுள் ளது வியக்கத்தகுந்த விஷயம்” என்றார்.

ஜாவியர் ஹெர்னாண்டஸ் போன்று அணியில் கவனிக்கத் தக்கவராக மாறி உள்ளார் வளர்ந்து வரும் இளம் வீரரரான ஹிர்விங் லோஸானோ (23). வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் கூட்டமைப்பு சாம்பியன்ஸ் லீக்கில் கடந்த ஆண்டு தங்க ஷூ, இளம் வீரர் விருது வென்ற ஹிர்விங் லோஸானோவிடம் இருந்து சிறந்த பங்களிப்பு வெளிப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜாவியர் ஹெர்னாண்டஸ், ஹிர்விங் லோஸானோ ஆகியோருடன் மிகுவல் லேயன், ரால் ஜிமினெஸ், டிகோ ரேயஸ் ஆகியோரும் நம்பிக்கை அளிக்கும் வீரர்களாக உள்ளனர். ரஷ்ய உலகக் கோப்பையில் மெக்சிகோ இடம் பிடித்துள்ள எஃப் பிரிவு மிகவும் கடினமானதாக கருதப்படுகிறது. இதே பிரிவில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி, சுவீடன், தென் கொரியா அணிகள் உள்ளன.

லீக் சுற்றில் மெக்சிகோ அணி 2-வது இடத்தை பிடிக்கும் பட்சத்தில் நாக் அவுட் சுற்றில் பிரேசில் அணியை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். மெக்சிகோ அணியின் பயிற்சியாளரான ஜுவான் கார்லோஸ் ஒசோரியோ கூறும்போது, “"ஐரோப்பாவின் மிகப்பெரிய லீக்கில் விளையாடிய அனுபவம் கொண்ட வீரர்களின் ஒரு திடமான குழு எங்களிடம் உள்ளது. ரால் ஜிமினெஸ், ஜாவியர் ஹெர்னாண்டஸ், ஹிர்விங் லோஸானோ ஆகியோர் உயர்மட்ட திறனை வெளிப்படுத்தும் பட்சத்தில் எந்த அணிக்கு எதிராகவும் எங்களால் கோல் அடிக்க முடியும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்