ரஷ்யாவில் நடைபெற்று வரும் 2018 உலகக்கோப்பைக் கால்பந்தில் இன்று வரலாறு நிகழ்த்தப்பட்டது, நிகழ்த்திய அணி ஜப்பான். கடினமான கொலம்பியா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் வீழ்த்தி உலகக்கோப்பை கால்பந்து வரலாறு படைத்தது.
ஒரு தென் அமெரிக்க அணியை உலகக்கோப்பையில் வீழ்த்தும் முதல் ஆசிய அணி என்ற அழிக்க முடியாத வரலாற்றை ஏற்படுத்தியது ஜப்பான்.
ஆட்டத்தின் தொடக்க கணங்களில் ஒரு சர்ச்சை நிகழ்ந்தது. கொலம்பிய வீரர் கார்லோஸ் சான்சேஸ் இந்த உலகக்கோப்பையின் முதல் சிகப்பு அட்டைக் காட்டப்பட்டு வெளியேற்றப்பட்ட வீரரானார்.
ஜப்பான் வீரர் ஷிஞ்சி ககாக்வா கோல் நோக்கி அடித்த ஷாட்டை பெனால்டி பகுதிக்குள் கையால் தடுத்த்தார், இதனால் சிகப்பு அட்டைக் காட்டி வெளியேற்றப்பட்டார், கொலம்பிய அணி 10 வீரர்களுக்குக் குறுக்கப்பட்டது.
இதனையடுத்து பெனால்டி கொடுக்கப்பட 6வது நிமிடத்தில் ஜப்பானின் ஷிஞ்சி கவாக்வா அதனை கோலாக மாற்றி அதிர்ச்சி முன்னிலை பெறச் செய்தார்.
ஆனால் அதிர்ச்சியிலிருந்து மீண்ட கொலம்பியா 39வது நிமிடத்தில் யுவான் குவிண்டெரோ மூலம் சமன் செய்தது. ஃப்ரீ கிக்கை அருமையாக கோலாக மாற்றினர் குவிண்டெரோ. ஆனால் இரண்டாவது பாதியில் 73வது நிமிடத்தில் கார்னர் ஷாட் ஒன்றை ஜப்பான் வீரர் யூயா ஒசாகோ தலையால் முட்டி கோலுக்குள் தள்ள அதுவே வரலாற்றுக் கணமாக பிற்பாடு மாறியது 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான், தென் அமெரிக்க ஜெயண்ட்களான கொலம்பியாவை வீழ்த்தி உலகக்கோப்பை வரலாறு படைத்தது.
2014ம் ஆண்டு பிரேசில் உலகக்கோப்பையில் காலிறுதிக்கு முன்னேறிய அணி கொலம்பியாவாகும்.
ஆட்டம் தொடங்கி 6வது நிமிடத்திலேயே கொலம்பிய வீரர் சான்சேஸ் பெனால்டி பகுதியில் கோலுக்குச் சென்ற பந்தை வேண்டுமென்றே கையால் தடுக்க முயற்சி செய்ததால் ரெட் கார்டு காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார், உலகக்கோப்பை வரலாற்றில் வெகு விரைவில் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 2வது வீரரானார் கார்லோஸ் சான்சேஸ். 1986-ல் ஸ்காட்லாந்துக்கு எதிராக ஆல்பர்ட்டோ பேட்டிஸ்டாவுக்கு ரெட் கார்டு காண்பிக்கப்பட்ட போது ஆட்டம் தொடங்கி ஒரு நிமிடம் கூட ஆகவில்லை 54 விநாடிகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்லோஸ் சான்சேஸ் வெளியேற்றம், பிரமாத வீரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் உடற்தகுதி பெறவில்லை ஆகிய காரணங்களினால் கொலம்பியா வண்ணமற்றுப் போனது.
குவிண்டெரோ ஃப்ரீ கிக்கில் வீர்ர்கள் சுவரைக் கடந்து கோல் அடித்து சமன் செய்தாலும் ஜப்பான் இடைவேளைக்குப் பிறகு போதிய உற்சாகத்துடன் ஆடியதில் 73வது நிமிடத்தில் கார்னர் ஷாட்டில் யூயா ஒசாகோ சற்றும் எதிர்பாராது அடித்த கோல் கொலம்பியாவுக்கு ஆப்பு வைத்தது.
6வது நிமிடத்தில் கார்லோஸ் சான்சேஸ் கையால் தடுக்காமல் இருந்திருந்தால் அது கோலாகியிருந்தாலும் 11 வீரர்களுடன் ஆடியிருக்கலாம் ஆனால் ஏதோ வேகத்தில் செய்யப்போக நடுவர் ஸ்கோமினா உடனேயே தன் பின் பாக்கெட்டில் கையை விட்டு சிகப்பு அட்டையை எடுக்க நேரிட்டது. சான்சேஸ் இல்லாததால் நடுக்களத்தில் ஜப்பானுக்கு நிறைய வெற்றிடங்கள் கிடைத்தன.
குவிண்டெரோ, ரடாமல் ஃபால்கோ கொலம்பிய அணிக்காக கூட்டணி அமைத்து இரண்டு கோல் வாய்ப்புகளை உருவாக்கினாலும் ஜப்பானின் ஈஜி கவாஷிமா இரண்டு நெருக்கமான வாய்ப்புகளை அருமையாகத் தடுத்து விட்டார். ஆனால் இடையில் கொலம்பிய தடுப்பு ஓட்டையினால் பதிலி வீரர் டேவின்சன் சான்சேஸ் தவறிழைக்க ஜப்பானின் ஒசாகோ 2வது கோலுக்கான வாய்ப்பைப் பெற்றார் ஆனால் இவர் ஷாட் வெளியே சென்றது.
இடைவேளைக்கு முன்னதாக கொலம்பியாவுக்குக் கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பில் எப்படியும் 4 ஜப்பான் வீரர்கள் எம்பி காரியத்தைக் கெடுப்பார்கள் என்று யூகித்த குவெண்டிரோ பந்தை இடது காலில் சற்றே தாழ்வான ஷாட்டை அடித்தது கோலாக மாறியது.
இடைவேளைக்குப் பிறகு கொலம்பியா ஆடிக்கொண்டிருக்கின்றனர் என்பது போல்தான் இருந்தது 73வது நிமிடத்தில் ஒசாகா கார்னர் ஷாட் வந்த போது கொலம்பிய தடுப்பு வீரர் சாண்டியாகோ அரியாஸுக்கும் மேல் எழும்பி தலையால் கோலுக்குள் செலுத்தினார். வரலாற்றுக் கணம். கடைசியில் ரோட்ரிக்ஸ் சமன் செய்ய நெருக்கமாக வந்தார் ஆனால் பலனில்லை. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே சான்சேஸை இழந்தது கொலம்பிய அணிக்கு பின்னடைவை அளித்தது, அதிலிருந்து அணி மீளவில்லை.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
20 mins ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago