ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியுடன் சென்னையின் எஃப்சி இன்று பலப்பரீட்சை

By செய்திப்பிரிவு

குவாஹாட்டி: இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) 2024-25 சீசன் 11 நாட்கள் ஓய்வுக்கு பிறகு தற்போது மீண்டும் திரும்ப உள்ளது. இதன்படி இன்று (17-ம் தேதி) இரவு 7.30 மணிக்கு குவாஹாட்டியில் உள்ள இந்திரா காந்தி தடகள மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்சி - நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் எஃப்சி அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே தங்களது கடைசி ஆட்டங்களை டிரா செய்திருந்தன.

நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் எஃப்சி கோவாவுடன் மோதியிருந்தது. இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. அதேவேளையில் சென்னையின் எப்சி அணி, 10 பேருடன் விளையாடிய ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தை கோல்களின்றி டிரா செய்திருந்தது. ஐஎஸ்எல் தொடரில் சென்னையின் எஃப்சி - நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் எஃப்சி அணிகள் 20 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னையின் எஃப்சி 8 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் எஃப்சி 7 ஆட்டங்களில் வெற்றியை பதிவு செய்துள்ளது. 5 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்துள்ளன.

சென்னையின் எஃப்சி அணிக்கு எதிராக கடைசியாக விளையாடி 10 ஆட்டங்களில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணி ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமேவெற்றி கண்டது. 3 ஆட்டங்களை டிரா செய்த நிலையில் 6 ஆட்டங்களில் தோல்வியை பதிவு செய்துள்ளது. இருப்பினும் சொந்த மைதானத்தில் சென்னையின் எஃப்சி அணிக்கு எதிராக கடைசியாக விளையாடிய 8 ஆட்டங்களில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் இரண்டில் மட்டுமே தோல்வி கண்டுள்ளது. 5 ஆட்டங்களில் வெற்றி பெற்ற நிலையில் ஒரு ஆட்டத்தை டிரா செய்திருந்தது நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்