முல்டானில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி டெஸ்ட் வரலாற்றில் இல்லாத விசித்திர முடிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளையில் ஜோ ரூட் 262 ரன்களை விளாசி, ஹாரி புரூக்குடன் சேர்ந்து 454 ரன்கள் கூட்டணி அமைத்து பல டெஸ்ட் சாதனைகளை முறியடித்தார். மேலும் ஒரே காலண்டர் வருடத்தில் ஆயிரம் ரன்களை 5வது முறையாக எடுத்து சாதித்துள்ளார் ஜோ ரூட்.
பாகிஸ்தானுக்கு இப்படித் தோற்பது ஒன்றும் புதிதல்ல என்பது வேறு கதை! எப்படி சில அணிகள் வெற்றி பெற முடியாத சூழ்நிலையிலிருந்து வெற்றி பெறுவார்களோ அதே போல் பாகிஸ்தான் தோல்வியே சாத்தியமல்ல என்ற நிலையிலிருந்து தோற்கக் கூடிய அணி என்பது ரெக்கார்ட் புக்ஸை உற்று நோக்கினால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இப்போதைய அதன் பின்னடைவு ஐசிசி-யில் பிசிசிஐ-யின் பணபலம், பலவந்தத்தினால் உருவாக்கப்பட்டது என்றும் சொல்லலாம். நிற்க.
ஜோ ரூட் 2018 முதல் 2020 வரை சொதப்பினார். 2020-ம் ஆண்டு முடிவில் அவரது சராசரி 48-க்கும் கீழ் சரிந்ததாக கிரிக் இன்போ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதோடு 2018-20 சொதப்பல் காலக்கட்டத்தில் ஜோ ரூட்டின் சராசரி 40க்கும் கீழ் குறைந்தது குறிப்பிடத்தக்கது. 60 இன்னிங்ஸ்களில் 4 சதங்களையே அடிக்க முடிந்துள்ளது. அதாவது ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி, கேன் வில்லியம்சன் உச்சத்தில் இருந்த போது அந்தக் கூட்டணியில் ஜோ ரூட் இணைய முடியவில்லை. ஆனால் 2021 தொடக்கம் முதல் ஜோ ரூட்டின் கதையே வேறு.
2021-க்குப் பிறகு 91 இன்னிங்ஸ்களில் 4,841 ரன்களை 58.32 என்ற சராசரியில் எடுத்துள்ளார். இதில் 18 சதங்கள், 15 அரைசதங்கள் என்று மாபெரும் சாதனைக் காலக்கட்டத்தில் இப்போது வரை இருந்து வருகிறார். இதே காலக்கட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் 6 சதங்கள், விராட் கோலி சொதப்பலோ சொதப்பல் என்று 2 சதங்கள். கேன் வில்லியம்சன் 9 சதங்களை எடுத்துள்ளார். அதாவது ஜோ ரூட் மட்டுமே 18 சதங்கள், மும்மூர்த்திகள் சேர்ந்தே 17 சதங்கள்தான். குறிப்பாகத் ஜோ ரூட் துணைக்கண்டத்தில் இங்கிலாந்து வீரர்கள் வெயிலிலும் குழிப்பிட்ச்களிலும் நடனமாடிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் 2021-ல் கால்லே டெஸ்ட்டில் இலங்கைக்கு எதிராக ஒரு இரட்டைச் சதம் மீண்டும் ஒரு சதம், பிறகு சென்னை சேப்பாக்கத்தில் ஒரு வெற்றி இரட்டைச் சதம் என கோலோச்சினார்.
ஜோ ரூட்டுடன் ஒப்பிடக்கூடிய லெவலில் கூட விராட் கோலி இதே காலக்கட்டத்தில் ஆடியதில்லை. ஜோ ரூட்டுடன் ஒப்பிடத்தகுந்தவர்கள் என்றால் 2021-லிருந்து அதிக டெஸ்ட் ரன்கள் பட்டியலில் ரூட் முதலிடம், அடுத்து திமுத் கருணரத்னே, உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித். ஆனால் இங்கிலாந்து இதே காலக்கட்டத்தில் 50 டெஸ்ட் போட்டிகளை ஆடியது. லபுஷேன், ஸ்மித் ஆடியதை விட இது 16 போட்டிகள் அதிகம்.
5 முறை ஒரே ஆண்டில் 1000 ரன்களை எடுத்த ஜோ ரூட் 2021-ற்குப் பிறகு 3 முறை ஒரே ஆண்டில் 1000 ரன்களை எடுத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் தான் 6 முறை ஒரே ஆண்டில் 1000 ரன்களுக்கும் மேல் குவித்த சாதனையை வைத்துள்ளார். பாண்டின், ஜாக் காலிஸ், பிரையன் லாரா, குமார் சங்கக்காரா, மேத்யூ ஹெய்டன், அலிஸ்டர் குக் ஆகியோரும் 5 முறை இதே சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
ஜோ ரூட் இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த சாதனையாளர்கள் பட்டியலில்ல் 5வது இடத்தில் இருக்கிறார். அதிக சதங்கள் பட்டியலில் 6வது இடத்தில் இருக்கிறார். இதே போல் ஆடினால் அடுத்த 50-55 இன்னிங்ஸ்களில் சச்சின் டெண்டுல்கரின் 15,921 ரன்கள் சாதனையை முறியடிப்பார். இப்போது 147 டெஸ்ட்களில் ஜோ ரூட் 12,664 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago