வங்கதேசத்தை 8 விக்கெட்டுகளில் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் @ மகளிர் டி20 உலகக் கோப்பை

By செய்திப்பிரிவு

ஷார்ஜா: நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்று ஆட்டத்தில் வங்கதேசத்தை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தி உள்ளது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.

ஷார்ஜாவில் நடைபெற்ற குரூப்-பி ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி பந்து வீசியது. முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளில் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் நிகர் சுல்தானா 39 ரன்கள் எடுத்திருந்தார். மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கரிஷ்மா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை மேற்கு இந்தியத் தீவுகள் அணி விரட்டியது. 12.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு இலக்கை எட்டியது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. ஹேலி மேத்யூஸ் 34 ரன்கள் எடுத்தார். ஸ்டாஃபானி 27 (ரிட்டையர்ட் ஹெர்ட்), ஷெமைன் 21 மற்றும் தியாந்திரா 19 ரன்கள் எடுத்தனர்.

குரூப்-பி சுற்றில் மேற்கு இந்தியத் தீவுகள், தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளை பெற்றுள்ளது. இதன் மூலம் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவதில் அணிகளுக்கு இடையில் போட்டி நிலவி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்