வளர்த்த இங்கிலாந்து அணியை விட கோல்ஃப் ஆட்டம்தான் முக்கியமா? - ஜேம்ஸ் ஆண்டர்சன் மீது வீசப்படும் சாடல்கள்

By ஆர்.முத்துக்குமார்

உலகின் நம்பர் 1 ஸ்விங் பவுலராக அதிக விக்கெட்டுகளுடன் தன் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொண்ட ஜேம்ஸ் ஆண்டர்சன், இங்கிலாந்து அணியின் பவுலிங் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவரோ பாகிஸ்தானில் இங்கிலாந்து பவுலர்கள் வெயிலிலும், மட்டமான பேட்டிங் பிட்சிலும் திண்டாடிக் கொண்டிருக்கும் போது ஜேம்ஸ் ஆண்டர்சன் சொகுசாக கோல்ஃப் ஆடி வருவது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

பாகிஸ்தான் தொடருக்கான இங்கிலாந்து அணியின் தயாரிப்புகளில் இல்லாமல் கோல்ஃப் தொடர் ஒன்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து இங்கிலாந்து அணியைப் புறக்கணித்ததாக ஜேம்ஸ் ஆண்டர்சன் மீது கடும் புகார்கள் எழுந்துள்ளன.

இங்கு முல்டானில் கடும் வெயிலிலும், மட்டரகமான பேட்டிங் பிட்சிலும் இங்கிலாந்து பவுலர்கள் போராடி வருகின்றனர். முல்டானை விட ஆண்டர்சனுக்கு ஸ்காட்லாந்து கோல்ஃப் தொடர் முக்கியமாகி விட்டது, இத்தனை ஆண்டுகள் இங்கிலாந்து கிரிக்கெட் அவரை எப்படிப் போற்றிப் பாதுகாத்து வந்தது, அந்த வாரியத்திற்கோ, தன் அணிக்கோ உதவி புரியாமல் கோல்ஃப் ஆடச்செல்வதா என்று ரசிகர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.

முல்டானில் அப்துல்லா ஷபீக் 102 ரன்களையும் கேப்டன் ஷான் மசூத் 151 ரன்களையும் விரைவு கதியில் எடுக்க சற்று முன் வரை பாகிஸ்தான் அணி 2ம் நாள் ஆட்டத்தில் 346/4 என்று பெரிய ஸ்கோரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அட்கின்சன், கார்ஸ் போன்ற அனுபவமற்ற பவுலர்களை வைத்துக் கொண்டு இங்கிலாந்து திணறி வருகிறது. வங்கதேசத்திடம் 2-0 என்று தோற்ற பாகிஸ்தான் அணியை இப்படி எழும்ப விடலாமா என்பதும் இங்கிலாந்து வட்டாரங்களில் ஆதங்கமாக எழுந்து வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்தின் பிரபல கோச் இயன் பாண்ட், “முல்டானில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் சாத்து வாங்குகின்றனர். ஃபிளாட் பிட்ச், பவுலிங்கும் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. இங்கு அணி திணறிக் கொண்டிருக்க இங்கிலாந்து அணியின் பவுலிங் ஆலோசகராக நியமிக்கப்பட்ட ஜேம்ஸ் ஆண்டர்சன் ஸ்காட்லாந்தில் கோல்ஃப் தொடரை மகிழ்ச்சியுடன் ஆடிவருகிறார். அங்கு அவர் 3 அண்டர் பார் என்று சிறப்பாக ஆடுகிறார், இது நல்ல செய்தி!” என்று கடும் கிண்டலுடன் சாடியுள்ளார்.

ஆனால் பிரெண்டன் மெக்கல்லம், ஜேம்ஸ் ஆண்டர்சன் மீதான விமர்சனங்களிலிருந்து அவரைக் காப்பாற்றும் விதமாக, “இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆண்டர்சன் கோச் ஆக இருக்கத் தகுதி அற்றவர் என்று கூறினீர்கள், இப்போது திடீரென ‘அவர் இல்லையே’ என்று பொருமினால் எப்படி? இது குறுகிய காலத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஏற்படுத்தியத் தாக்கத்தைத்தான் நமக்கு அறிவுறுத்துகிறது. வீரரிலிருந்து கோச் ஆக ஆண்டர்சன் ஏற்படுத்திய தாக்கம் இதுதான் என்று நான் கருதுகிறேன்,” என்று ஆண்டர்சனுக்கு முட்டுக் கொடுத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்