சாமுவேல்ஸ் தனியாக மே.இ.தீவுகளுக்கு வென்று கொடுத்த டி20 உலகக் கோப்பை | மறக்குமா நெஞ்சம்

By ஆர்.முத்துக்குமார்

2012 டி20 உலகக் கோப்பை இலங்கையில் நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டியில் இலங்கையும் மே.இ.தீவுகள் அணியும் மோதின. டேரன் சமி தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இதே தேதியில் அதாவது 7-10-2012 அன்று மகேலா ஜெயவர்தனே தலைமை இலங்கையை வீழ்த்தி டி20 உலகக் கோப்பையை வென்றது.

அரையிறுதிப் போட்டிக்கு இலங்கை, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்றன. இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா என்று கடினமான பிரிவில் சிக்கிக் கொண்டது. ஆனாலும் 3 போட்டிகளில் 2 வெற்றியுடன் அதுவும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 1 ரன்னில் வென்றதால் 4 புள்ளிகளுடன் 3-ம் இடமே பிடிக்க முடிந்தது. காரணம் நெட் ரன் ரேட்டில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் முதல் 2 இடங்களைப் பிடித்தன.

எனவே, முதல் அரையிறுதிப் போட்டி கொழும்புவில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்றது. இதில் இலங்கை முதலில் பேட் செய்து மந்தமான பிட்சில் 20 ஓவர்களில் 139/4 என்று முடிந்தது. வெற்றிபெற வேண்டிய இலக்கை எதிர்த்து பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 123 ரன்கள் என்று படுதோல்வி அடைய இலங்கை இறுதிக்கு முன்னேறியது. பாகிஸ்தான் அணியில் முகமது ஹபீஸ் 42, இம்ரான் நசீர் 20, உமர் அக்மல் 29 ஆகியோர் தவிர யாரும் இரட்டை இலக்கத்தை எட்டவில்லை. அஞ்சேலோ மேத்யூஸ் 2, புதிர் ஸ்பின்னர் அஜந்தா மெண்டிஸ் 2, இடது கை ஸ்பின்னர் ரங்கனா ஹெராத் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஆட்ட நாயகனான 42 ரன்கள் எடுத்த இலங்கை கேப்டன் மகேலா ஜெயவர்தனே தேர்வு செய்யப்பட்டார்.

மற்றொரு அரையிறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலிய அணிகள் கொழும்புவில் மோதின. டாஸ் வென்ற மே.இ.தீவுகள் கேப்டன் டேரன் சமி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது மிக ஸ்மார்ட் மூவ் ஆக அமைந்தது. ஏனெனில் பிட்ச் போகப்போக மந்தமாகி பந்து மட்டைக்கு வர தாமதமாகும்.

கிறிஸ் கெய்ல் 41 பந்துகளில் 5 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 75 ரன்களை விளாச சாமுவேல்ஸ் 26, டிவைன் பிராவோ 3 சிக்சர்களுடன் 37, கிரன் போலார்ட் 3 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 15 பந்துகளில் 38 என்று விளாசித் தள்ள, மே.இ.தீவுகள் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 205 ரன்களை எடுத்தது.

தொடர்ந்து ஆடிய ஜார்ஜ் பெய்லி தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் வாட்சன், வார்னர், மைக் ஹஸ்ஸி, கேமரூன் ஒயிட், ஜார்ஜ் பெய்லி, டேவிட் ஹஸ்ஸி, மேட் வேட் என்று அதிரடி வரிசை இருந்தும் சாமுவேல் பத்ரி, ரவி ராம்பால், சுனில் நரைன், கிரன் பொலார்ட் பந்து வீச்சில் சுருண்டு வெறும் 131 ரன்களுக்குச் சுருண்டது. கேப்டன் பெய்லி மட்டுமே 29 பந்துகளில் 63 விளாசினார். வெஸ்ட் இண்டீஸ் இறுதிக்குள் நுழைந்தது.

இறுதிப் போட்டி மர்லன் சாமுவேல்ஸ் அதிரடி!- இறுதிப் போட்டியும் கொழும்பு ஆர்பிஎஸ் மைதானத்தில் இதே தேதியில் (7-10-2012)-ல் நடைபெற்றது, டாஸ் வென்ற டேரன் சமி இந்த முறையும் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆனால் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் புதிர் பவுலர் அஜந்தா மெண்டிஸ் பந்தை தவறாக ஆடி எல்.பி.ஆகி 3 ரன்களில் வெளியேற ஜான்சன் சார்லஸ் டக் அவ்ட் ஆக, பிராவோ, 19, போலார்ட் 2, ஆந்த்ரே ரஸல் 0 என்று அனைவரும் அஜந்தா மெண்டிஸிடம் மடிந்து விட வெஸ்ட் இண்டீஸ் 87/5 என்று ஆனது.

ஆனால் அஜந்தா மெண்டிஸ், அகிலா தனஜெயா தவிர யாரும் ஒழுங்காக வீசவில்லை குறிப்பாக உலகின் அப்போதைய சிறந்த டி20 பவுலர் லஷித் மலிங்காவுக்கு மோசமான போட்டியாகி விட்டது. அவர் 2 பவுண்டரிகளுடன் 5 சிக்சர்களையும் கொடுத்து 4 ஓவர்களில் 54 ரன்கள் வாரி வழங்கினார், மர்லன் சாமுவேல்ஸ் 56 பந்துகளில் 3 பவுண்டரிகள் 6 அதிரடி சிக்சர்களுடன் 78 ரன்களை விளாசினார். குறிப்பாக மலிங்கா வீச வந்த 13வது ஓவரில் யார்க்கர்கள் சரியாக விழாமல் வாகாக அமைய 3 சிக்சர்களைத் தொடர்ச்சியாக விளாசினார் சாமுவேல்ஸ். பிளிக் டீப் மிட்விக்கெட், லாஃப்ட் லாங் ஆன், அருமையான எக்ஸ்ட்ரா கவர் சிக்ஸ் என்று சாமுவெல்ஸ் இலங்கை அணியை அதிர்ச்சிக்கு ஆளாக்கினார். ஒரு சிக்ஸ் இலங்கை கிரிக்கெட் ஸ்டேடியத்தின் மேற்கூரையில் போய் விழுந்தது. 108 மீ சிக்ஸ். அந்த உலகக்கோப்பையின் மிக தொலைதூரம் சென்ற சிக்ஸ் அது.

டேரன் சமி 15 பந்துகளில் 26 ரன்கள் விளாச கடைசி 10 ஒவர்களில் 105 ரன்கள் விளாசப்பட்டாலும் வெஸ்ட் இண்டீஸ் 15-20 ரன்கள் குறைவாக எடுத்திருப்பதாக அஞ்சேலோ மேத்யூஸ் கூறினார். ஆனால் சேசிங்கில் அபாய வீரர் திலக ரத்னே தில்ஷானை மே.இ.தீவுகள் ஸ்விங் பவுலர் ரவி ராம்பால் கிளீன் பவுல்டு செய்தார், தில்ஷனின் ஆஃப் ஸ்டம்ப் பல அடி தூரம் தள்ளிப் போய் விழுந்தது. அவர் இலங்கை ரசிகர்களைப் பார்த்து ‘உஷ்’ என்று உதட்டின் மேல் கையை வைத்து அறிவுறுத்தியது இன்றும் நினைவில் உள்ளது.

சுனில் நரைன் 9 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்த டேரன் சமி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற சாமுவேல் பத்ரி, ரவி ராம்பால், மர்லன் சாமுவேல்ஸ் பவுலிங்கிலும் அசத்தி 4 ஓவர்களில் 15 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்ற இலங்கை அணி சோகமாக 101 ரன்களுக்கு வீழ்ச்சி கண்டு, கோப்பையை தவற விட்டது, கலிப்ஸோ டான்ஸுடன் மே.இ.தீவுகள் கோப்பையைத் தூக்கினர். ஆட்ட நாயகன் மர்லன் சாமுவேல்ஸ், தொடர் நாயகன் ஷேன் வாட்சன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்