முல்தான்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் இந்தத் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி முல்தான் நகரில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.
கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக விளையாடாததால் ஆலி போப் தலைமையில் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கான 11 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து அணி நிர்வாகம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. பென் ஸ்டோக்ஸுக்கு பதிலாக ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் களமிறங்க உள்ளார்.
ஜேக் லீச், ஷோயிப் பஷிர் ஆகிய 2 சுழற்பந்து வீச்சாளர்கள் களமிறங்குகின்றனர். ஜேக் லீக் கடைசியாக கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி இருந்தார். தொடக்க வீரரான ஸாக் கிராவ்லி காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து களமிறங்க உள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர் பிரைடன் கார்ஸ் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். மற்றொரு பிரதான வேகப்பந்து வீச்சாளராக கஸ் அட்கின்சன் உள்ளார். கஸ் அட்கின்சன் பங்கேற்கும் முதல் வெளிநாட்டு போட்டி இதுவாகும்.
இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற நிலையில் பாகிஸ்தான் தொடரை அணுகுகிறது. அதேவேளையில் பாகிஸ்தான் அணி தனது சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை வங்கதேச அணியிடம் 2-0 என முழுமையாக இழந்த நிலையில் இங்கிலாந்து அணியை சந்திக்கிறது.
கடைசியாக இங்கிலாந்து அணிகடந்த 2022-ம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியிருந்தது. அப்போது நடைபெற்ற டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என முழுமையாக கைப்பற்றியிருந்தது. அந்த தொடரில் ஜேக் லீக் 15 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
பாகிஸ்தான் அணி ஷான் மசூத் தலைமையில் களமிறங்குகிறது. அவர், கேப்டனாக பொறுப்பேற்றது முதல் பாகிஸ்தான் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோல்வி கண்டுள்ளது. இம்முறை பேட்டிங்கை பலப்படுத்தும் விதமாக ஆல்ரவுண்டரான அமீர் ஜமாலை அணிக்குள் கொண்டு வந்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அமீர் ஜமால் 18 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் கடைசியாக கடந்த 2021-ம்ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்றிருந்தது. அதன் பின்னர் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேச அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது.வேகப்பந்து வீச்சில் எழுச்சி இல்லாதது, முன்னணி பேட்ஸ்மேன்களிடம் இருந்து நிலையான செயல்திறன் வெளிப்படாதது ஆகியவை பாகிஸ்தான் அணிக்கு கடும் சரிவைகொடுத்துள்ளது.
இதில் இருந்து மீண்டு வந்தால் மட்டுமே இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கான வழிகளை கண்டறிய முடியும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
52 mins ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago