கொலம்பியாவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்துவாரா ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ்?

By பெ.மாரிமுத்து

கொ

லம்பியா அணி உலகக் கோப்பைத் தொடருக்கு தகுதி பெறுவது இது 5-வது முறையாகும். தென் அமெரிக்க கண்டங்களுக்கு இடையிலான தகுதி சுற்றில் கொலம்பியா 4-வது இடம் பிடித்து ரஷ்ய உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. தகுதி சுற்றில் பலம் வாய்ந்த அர்ஜென்டினா, பிரேசில், உருகுவே, சிலி ஆகிய அணிகளுக்கு எதிராக ஒரு ஆட்டத்தில் கூட கொலம்பியா வெற்றி பெறவில்லை. அதேவேளையில் இரு முறை ஈக்வேடார் அணியை வீழ்த்தியது. கடைசி ஆட்டத்துக்கு முன்பு வரை கொலம்பியா அணி உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதை உறுதி செய்யாமலேயே இருந்தது. பெரு அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தை 1-1 என்ற கணக்கில் டிரா செய்ததால் ரஷ்ய உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை பெற்றது.

1990-ம் ஆண்டு காலகட்டத்துக்கு பிறகு ரேடமெல் ஃபல்காவோ கேப்டனாக இருக்கும் தற்போதைய கொலம்பியா அணி வலுவானதாகக் கருதப்படுகிறது. நட்சத்திர வீரர்களான ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ், குயின்டெரோ ஆகியோர் முன்னாள் சிறந்த வீரர்களான கார்லோஸ் வால்டர்ராமா, ஃபாஸ்டினோ அஸ்பிரில்லா ஆகியோருடன் ஒப்பிட்டு பேசப்பட்டு வருகின்றனர். பிரேசிலில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் கொலம்பியா அணி கால் இறுதி வரை முன்னேறியிருந்தது.

கொலம்பியா வீரர் ரோட்ரிக்ஸ் தற்போது பேயர்ன் முனிச் கிளப் அணிக்காக விளையாடி தனது வாழ்வின் சிறந்த வடிவத்தில் உள்ளார். கொலம்பியா அணியின் 4-2-3-1 என்ற பார்மட்டில் ரோட்ரிக்ஸால் மீண்டும் ஒரு அற்புதமான ஆட்டத்திறனை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியும். ரோட்ரிக்ஸ் போன்றே குயின்டெரோவும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறன் கொண்டவர். ரிவர் பிளேட் கிளப் அணிக்காக விளையாடி வரும் அவர், தனது இடது கால் மந்திரத்தால் ஆல்ரவுண்ட் திறனை வெளிப்படுத்தக்கூடிய வீரராக திகழ்கிறார்.

நடுகளத்தில் அபெல் அகுய்லார், கார்லோஸ் சான்செஸ் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். இவர்களுடன் ஸ்டிரைக்கர்களான லூயிஸ் முரியல், குவாடரடோ, வில்மார் பரியோஸ், எட்வின் கார்டோனா ஆகியோரும் நம்பிக்கை அளிக்கக்கூடிய வீரர்களாக இடம் பெற்றுள்ளனர். கேப்டன் ரேடமெல் ஃபல்காவோ இந்த சீசனில் பிரெஞ்ச் லீக்கில் மோனாக்கோ கிளப் அணிக்காக 18 கோல்கள் அடித்து அற்புதமான பார்மில் உள்ளார். டிபன்ஸில் கிறிஸ்டின் ஸபாடா, டேவின்சன் சான்செஸ், யெர்ரி மினா ஆகியோர் பலமானவர்களான உள்ளனர்.

ஆர்சனல் கிளப் அணிக்காக விளையாடி வரும் டேவிட் ஒஸ்பினா கோல்கீப்பராக உள்ளார். ரஷ்ய உலகக் கோப்பையில் ஹெச் பிரிவில் இடம் பெற்றுள்ள கொலம்பியா அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதில் எந்தவித சிரமமும் இருக்காது என்றே கருதப்படுகிறது. இதே பிரிவில் ஜப்பான், செனகல், போலந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.

68 வயதான பயிற்சியாளரான ஜோஸ் பெக்கர்மனின், களயுத்திகள் கடந்த காலத்தில் சில முக்கியமான ஆட்டங்களில் வெற்றியை தேடித்தரும் வகையில் அமைந்ததில்லை. முக்கியமாக 2006-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பெக்கர்மன் அர்ஜென்டினா அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். அப்போது ஜெர்மனி அணிக்கு எதிரான கால் இறுதியில் 1-0 என முன்னிலை வகித்த நிலையில் தேவையில்லாமல் 2-வது பாதியில் முன்னணி வீரரான ஜூவான் ரோமன் ரிக்யூல்மியை வெளியே அமரவைத்தார்.

இதனால் 80-வது நிமிடத்தில் ஜெர்மனி கோல் அடிக்க ஆட்டம் டிரா ஆகி பெனால்டி ஷூட் அவுட்டுக்கு சென்றது. இதில் அர்ஜென்டினா 2-4 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டிருந்தது. இந்த தோல்விக்கு ஜோஸ் பெக்கர்மனின் மோசமான களவியூகமே கார ணம் என கடும் விமர்சனங்கள் எழுந்தது.

தற்போது கொலம்பியா அணியிலும் ஜோஸ் பெக்கர்மன் உலகக் கோப்பை தகுதி சுற்று ஆட்டங்களில் சில சந்தர்ப்பங்களில் அணியின் வெற்றிக்கான பாணிகளை மாற்ற முயன்றார். ஆனால் அவை தோல்விகளையே கொடுத்தது. இதனால் ஊடகங்களின் கடும் விமர்சனத்துக்கும் ஆளானார் ஜோஸ் பெக்கர்மன்.

கடந்த கால கசப்பான அனுபவங்களில் இருந்து ஜோஸ் பெக்கர்மன் பாடம் கற்றுக் கொண்டு, தற்போதைய பார்முலாவை சரியாக கடைபிடிக்கும் பட்சத்தில் கொலம்பியா அணி தனது திறனுக்கு தகுந்தபடி நிச்சயம் ரஷ்ய உலகக் கோப்பையில் சாதனை படைக்க முயற்சிக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்