விஏஆர் தொழில்நுட்பம்

By பெ.மாரிமுத்து

ஷ்ய உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நடுவர்களுக்கு உதவும் வகையில் விஏஆர் தொழில் நுட்பம் முதன்முறையாக பயன்படுத்தப்பட உள்ளது. ‘வீடியோ அசிஸ்டன்ட் ரெப்ரீ’ என்பதின் சுருக்கமே விஏஆர் என்பதாகும். பந்து கோல் லைனை சரியாக கடந்ததா, ஆஃப் சைடு கோலா, பெனால்டி கிக், ரெட் கார்டு வழங்குவது மற்றும் ரெட் கார்டு வழங்குவதில் தவறு செய்த வீரரை சரியாக கண்டறிவது ஆகிய விஷயங்களில் நடுவரின் பணியை திறம்பட கையாள்வதற்கும், 100 சதவீதம் துல்லியமான முடிவை எடுப்பதற்குமே இந்த உயர் தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் டிஆர்எஸ் போன்று இந்த தொழில்நுட்பத்தின் உதவியை வீரர்கள் பயன்படுத்த முடியாது. பயிற்சியாளர்கள் கூட விஏஆர்-ஐ நாட முடியாது. களநடுவர் மட்டுமே விஏஆர் தொழில் நுட்பத்தை முழுமையாக பயன்படுத்த முடியும். விஏஆர் தொழில்நுட்ப குழுவில் வீடியோ அசிஸ்டன்ட் ரெப்ரீ, அவரின் உதவியாளர் மற்றும் ரீப்ளே ஆப்ரேட்டர் ஆகிய 3 பேர் இடம் பெற்றிருப்பார்கள். இவர்கள் வீடியோ ஆபரேட்டிங் அறையில் அமர்ந்தபடி போட்டியின் காட்சிகளை பல்வேறு கோணங்களில் திரையில் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

அதேவேளையில் அவர்கள், களத்தில் உள்ள நடுவருடன் மைக் மூலம் தொடர்பில் இருப்பார்கள். வீடியோ ஆபரேட்டிங் அறையானது மாஸ்கோவில் உள்ள சர்வதேச ஒளிபரப்பு மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை போட்டி நடைபெறும் 12 மைதானங்களில் உள்ள கேமராக்களும் இந்த மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. விஏஆர் குழுவுக்கு இந்த மையத்தில் இருந்துதான் வீடியோ காட்சிகள் அனுப்பி வைக்கப்படும்.

களத்தில் உள்ள நடுவருக்கு முடிவுகளை எடுப்பதில் குழப்பம் ஏற்பட்டால் அவர், விஏஆர் குழுவை மைக் மூலம் தொடர்பு கொள்வார். அதேவேளையில் களநடுவர் ஏதேனும் தவறான முடிவு எடுத்தாலும் விஏஆர் குழு அதனை சுட்டிக் காட்டும். எனினும் இறுதி முடிவை களநடுவரே எடுப்பார். விஏஆர் குழுவால் பரிந்துரைகள் மட்டுமே வழங்க முடியும். விஏஆர் தொழில்நுட்பத்துக்காக கோல்கம்பத்தின் பகுதியை கவர் செய்யும் விதமாக இருபுறமும் தலா 6 வீடியோ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கேமராக்களும் நிமிடத்துக்கு 500 பிரேம்களை பதிவு செய்து அதனை 15 கம்ப்யூட்டர்களுக்கு அனுப்பும். நடுவர், விஏஆர் தொழில்நுட்பத்தை நாட விரும்பினால் களத்தில் இருந்து அவர் சைகை காட்டுவார். இதைத் தொடர்ந்து அவருக்கு விஏஆர் குழு உதவிகள் வழங்கும். விஏஆர் முடிவுக்காக 2.30 நிமிடங்கள் செலவிடப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்