துபாய்: மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை, தென் ஆப்பிரிக்க அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
மகளிர் டி20 உலக கோப்பை கிரிக் கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. துபாயில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் முதலில் விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்தது.
அணியில் அதிகபட்சமாக ஸ்டெ பானி டெய்லர் 41 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் ஹெய்லி மேத்யூஸ் 10, கியானா ஜோசப் 4, டியான்ட்ரா தோட் டின் 13, விக்கெட் கீப்பர் கேம்பெல் 17, ஆலியா அலைன் 7 ரன்கள் எடுத்தனர். ஜைஜா ஜேம்ஸ் 13 பந்துகளில் 15 ரன்கள் சேர்த்து அவுட்டாகாமல் இருந்தார்.
தென் ஆப்பிரிக்க வீராங்கனைகள் நான்குலுலேகோ மிலாபா 4 விக்கெட் களை கைப்பற்றினார். மரிஜான் காப் 2 விக்கெட்களை வீழ்த்தினார். பின்னர் 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப் பிரிக்க வீராங்கனைகள் களமிறங்கினர். தொடக்க வீராங்களையாக களமிறங் கிய கேப்டன் லாரா வோல்வார்ட் 55 பந்துகளில் 59 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதில் 7 பவுண்டரிகள் அடங்கும். மற்றொரு வீராங்கனை தாஸ்மின் பிரிட்ஸ் 52 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்து இறுதி வரை களத்தில் இருந்தார். 17.5 ஓவர்களில் 119 ரன்கள் எடுத்த தென் ஆப்பிரிக்க அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கவைத்தது.
» விளையாட்டு பல்கலை. 14-வது பட்டமளிப்பு விழா: 3,638 மாணவர்களுக்கு பட்டம்
» திருப்பதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்: முதல்வர் சந்திரபாபு பட்டு வஸ்திரம் காணிக்கை
ஆஸ்திரேலியா-இலங்கை மோதல்: இன்று 2 லீக் போட்டிகள் நடை பெறவுள்ளன. பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதவுள்ளன. இரவு 7 மணிக்கு நடை பெறும் 2-வது ஆட்டத்தில் வங்கதேசம். இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago