வரலாற்று முதல் டெஸ்ட் 2 நாட்களில் முடிந்தது; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி: ஆப்கான் ஏமாற்றம்

By இரா.முத்துக்குமார்

 

பெங்களூருவில் நடைபெற்ற வரலாற்று முதல் டெஸ்ட் போட்டியில் ஆப்கான் அணி 2 நாட்களில் இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது. 2வது இன்னிங்சில் 103 ரன்களுக்குச் சுருண்டது, 2 நாட்களில் முதல் முறையாக இந்திய அணி டெஸ்ட் வெற்றியை ருசித்துள்ளது.

ஒரே நாளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 24 விக்கெட்டுகள் இதுவரை விழுந்ததில்லை, எனவே இதுவும் ஒரு சாதனைதான்.

2வது நாளான இன்று மட்டும் 24 விக்கெட்டுகள் விழுந்துள்ளன. இந்தப் போட்டியை சுருக்கமாக வர்ணிக்க வேண்டுமெனில் தவண், விஜய் ஜோடி 41.3 ஓவர்களில் 212 ரன்கள் சேர்க்க ஆப்கான் அணி ஒட்டுமொத்தமாக 66.3 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்துள்ளது. அணிகளுக்கிடையே உள்ள அதலபாதாளத்தை இது அறிவுறுத்துகிறது. 2வது இன்னிங்ஸில் ரவீந்திர ஜடேஜா 17 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

ஃபாலோ ஆனில் ஆப்கான் அணி உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மாவின் ஸ்விங்குக்கு பின் காலில் சென்றனர், அதன் பிறகு காலை நீட்டவேயில்லை. இன்று காலை பாண்டியா அருமையான ஒரு இன்னிங்சில் ஸ்கோரை 347லிருந்து 474க்குக் கொண்டு சென்றார்.

2வது இன்னிங்ஸிலும் மொகமத் ஷேசாத் ஆட்டம் சோபிக்கவில்லை 3 பவுண்டரிகளுடன் அவர் 13 ரன்களில் இருந்த போது உமேஷ் யாதவ்வின் 143 கிமீ வேகப்பந்துக்கு தினேஷ் கார்த்திக்கிடம் எட்ஜ் செய்து வெளியேறினார். பிறகு ஜாவேத் அகமதியும் ஷேசாத் வழியில் ஆஃப் ஸ்டம்ப் பந்தைச் சீண்டி தவணிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதே ஓவரில் மொகமட் நபி, உள்ளே வந்த பந்தை பிளிக்கில் கோட்டை விட பேடைத் தாக்கியது களநடுவரின் நாட் அவுட் தீர்ப்பை மேல்முறையீடு செய்து அவுட் வாங்கியது இந்தியா, முதல் இன்னிங்ஸ் அதிகபட்ச ஸ்கோர் அடித்தவர் இரண்டாவது இன்னிங்ஸில் டக் அவுட் ஆனார். அகமத் ஷா, இஷாந்த் பந்தை நேராக கேப்டன் ரஹானேவிடம் மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேற 24/4.

ஹஸ்மதுல்லா ஷாகிதி (36), கேப்டன் ஸ்டானிக்ஜாய் (25) இணைந்து தைரியமாக தடுத்தாடி 37 ரன்களை 17 ஓவர்களில் எடுத்தனர், பிறகு ஸ்டானிக்ஜாய் அதற்கு முந்தைய ஏகப்பட்ட டாட் பால்களினால் பொறுமை இழந்து மேலேறி வந்து மிட்விக்கெட்டில் அடிக்க நினைத்து ஜடேஜாவிடம் அசிங்கமாக எக்ஸ்ட்ரா கவரில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

அஃப்சர் ஸசாய், ரஷீத் கான் ஆகியோரை ஜடேஜா பவுல்டு செய்தார். பிறகு முஜீபையும் வீழ்த்தி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற யாமின் அகமட்ஜாயை இஷாந்த் சர்மா பவுல்டு ஆக்கினார். கடைசி விக்கெட்டான வஃபாதாரை அஸ்வின் விழுங்க ஆப்கான் அணி 38.4 ஓவர்களில் 103 ரன்களுக்குச் சுருண்டு மிகப்பெரிய இன்னிங்ஸ் தோல்வியை அடைந்து 2 நாட்களில் தங்கள் வரலாற்று முதல் டெஸ்ட்டை இழந்தனர். இந்தியா முதன் முதலாக ஒரு டெஸ்ட் போட்டியில் 2 நாட்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்ட நாயகான உணவு இடைவேளைக்கு முன் சதமெடுத்த ஷிகர் தவண் தேர்வு செய்யப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

22 mins ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்