இந்தியா - வங்கதேச கிரிக்கெட் டெஸ்ட் மழையால் பாதிப்பு: ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்ட 2-ம் நாள் ஆட்டம்

By செய்திப்பிரிவு

கான்பூர்: இந்தியா - வங்கதேச அணிகள் இடையிலான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டம் மழையின் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதல்நாள் ஆட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு வங்கதேச அணி 107 ரன்கள் எடுத்திருந்தது. மழை, போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் 2-ம் நாள் ஆட்டம் நேற்று நடைபெறவிருந்தது. ஆனால் நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்தது. பல முறை ஆடுகளத்தையும், மைதானத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்த நடுவர்கள் 2-ம் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தனர். இதையடுத்து ஒரு பந்து கூட வீசப்படாமல் 2-ம் நாள் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

மொமினுல் ஹக் 40 ரன்களுடனும், முஷ்பிகுர் ரஹீம் 6 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். இன்று 3-ம் நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

37 mins ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்