நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய இலங்கை வீரர் தினேஷ் சந்திமால்

By செய்திப்பிரிவு

காலே: நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதல் நாள் ஆட்டத்தில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 306 ரன்கள் குவித்தது.

காலே நகரில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணிக்கு தொடக்கம் சற்று அதிர்ச்சியாக இருந்தது. பதும் நிசங்கா 1 ரன்னில் டிம் சவுதி பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய தினேஷ் சந்திமால், திமுத் கருணரத்னேவுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார்.

2-வது விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. நிதானமாக விளையாடிய திமுத் கருணரத்னே 109 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இதையடுத்து களமிறங்கிய சீனியர் ஆல்ரவுண்டரான ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சந்திமாலுடன் இணைந்து பொறுமையாக விளையாடி ஆட்டத்தை முன்னேடுத்துச் சென்றார்.

தினேஷ் சந்திமால் 171 பந்துகளில், 13 பவுண்டரிகளுடன் தனது 16-வது சதத்தை விளாசினார். ஏஞ்சலோ மேத்யூஸ் 111 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் அரை சதம் கடந்தார். இது அவருக்கு 44-வது அரை சதமாக அமைந்தது. அபாரமாக விளையாடி வந்த தினேஷ் சந்திமால் 208 பந்துகளில், 15 பவுண்டரிகளுடன் 116 ரன்கள் எடுத்த நிலையில் கிளென் பிலிப்ஸ் பந்தில் போல்டானார். 3-வது விக்கெட்டுக்கு தினேஷ் சந்திமால் - ஏஞ்சலோ மேத்யூஸ் ஜோடி 92 ரன்கள் சேர்த்தது.

இதன் பின்னர் களமிறங்கிய கமிந்து மெண்டிஸ் அதிரடியாக விளையாடி 53 பந்துகளில் 8 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் தனது 5-வது அரை சதத்தை கடந்தார். முதல் நாள் ஆட்டத்தின் முடி வில் இலங்கை அணி 90 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 306 ரன்கள் குவித்தது. ஏஞ்சலோ மேத்யூஸ் 78 ரன்களுடனும், கமிந்து மெண்டிஸ் 51 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்