அண்ணா பல்கலைக்கழக மண்டலம்-1 பாட்மிண்டன் தொடர் வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் ஆடவர் பிரிவில் கவரபேட்டை ஆர்எம்கே பொறியியல் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணி இறுதிப் போட்டியில் வேல் மல்டி டெக் கல்லூரியை வீழ்த்தியது. முதலில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஆர்எம்கே கல்லூரி 18-21, 17-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.
அடுத்து நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் ஆர்எம்கே கல்லூரி 21-11, 21-12 என்ற செட் கணக்கிலும், ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் 21-3, 21-6 என்ற செட்கணக்கிலும் வெற்றிபெற்றது. மகளிர் பாட்மிண்டனில் ஆர்எம்கே கல்லூரி அணி 3-வது இடம் பிடித்தது.
வெற்றி அணிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வேலம்மாள் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த ஜெயபாலராஜா, அண்ணா பல்கலைக்கழக மண்டலம்-1 விளையாட்டு செயலாளர் ரமேஷ் கண்ணன் ஆகியோர் வழங்கினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
42 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago