ஹாக்கியில் இந்தியன் ரயில்வே வெற்றி

By செய்திப்பிரிவு

சென்னை: 95-வது அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதன் 5-வது நாளான நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் இந்தியன் ரயில்வே 3-2 என்ற கோல் கணக்கில் மகாராஷ்டிரா அணியை தோற்கடித்தது. இந்தியன் ரயில்வே அணி தரப்பில் யுவராஜ் வால்மிகி (13- வது நிமிடம்), சிம்ரன்ஜோத் சிங் (40-வது நிமிடம்), ஷிவம் ஆனந்த் (47-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு பீல்டு கோல் அடித்தனர்.

மகாராஷ்டிரா அணி சார்பில் ரோகன் பாட்டீல் (59-வது நிமிடம்), வெங்கடேஷ் (60-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் கர்நாடக அணி 4-3 என்ற கோல் கணக்கில் போபால் அணியை தோற்கடித்தது. கர்நாடக அணி தரப்பில் அபரன் சுதேவ் (12 மற்றும் 47- வது நிமிடங்கள்), ராகுல் (13 மற்றும் 40-வது நிமிடங்கள்) ஆகியோர் தலா இரு கோல்களை அடித்தனர். போபால் அணி சார்பில் ஃபராஸ் (7-வது நிமிடம்), மோகன் சிங்கலா (46-வது நிமிடம்), கோபி குமார் சோன்கர் (49-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்