வலுவான பந்துவீச்சு கொண்ட அணியை உருவாக்க விரும்புகிறோம்: சொல்கிறார் ரோஹித் சர்மா

By செய்திப்பிரிவு

சென்னை: சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. வெற்றிக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது: வலுவான பந்துவீச்சு கொண்ட அணியை உருவாக்க விரும்புகிறோம், நிலைமைகள் எதுவாக இருந்தாலும் எதிர்கொள்ள நாங்கள்தயாராக இருக்க வேண்டும். நிலைமைகள் எதுவாக இருந்தாலும், நாங்கள் இந்தியாவில் விளையாடினாலும், வெளிநாட்டில் விளையாடினாலும், அதற்கு தகுந்தவாறு அணியை உருவாக்க விரும்புகிறோம்.

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நாங்கள் விரும்பிய முடிவைபெற்றுள்ளோம். ரிஷப் பந்த் சில கடினமான காலங்களை கடந்து வந்துள்ளார். அந்த கடினமான காலங்களில் அவர் தன்னை நிர்வகித்த விதம் பார்ப்பதற்கு அருமையாக இருந்தது. அவர், ஐபிஎல் தொடருக்கு திரும்பி வந்தார், அதைத் தொடர்ந்து டி 20உலகக் கோப்பையில் பங்கேற்ற ரிஷப் பந்த்தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடிஉள்ளார். டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை அவர், மிகவும் நேசிக்கிறார்.

சிவப்பு மண் ஆடுகளத்தில் பேட்டிங் செய்தாலும் சரி, பந்து வீசினாலும் சரி, நிறையபொறுமையைக் காட்ட வேண்டும். அதிகரன்களைப் பெறுவதற்கு நாங்கள் பேட்டிங்கில் பொறுமையாக இருந்தோம், பின்னர் பந்துவீச்சில் நாங்கள் சரியான பகுதியில் தொடர்ந்து வீசி அழுத்தம் கொடுத்தோம்.

அஸ்வின் ஒவ்வொரு முறையும் முன்னே வந்து திறனை வெளிப்படுத்துவதை பார்க்கும்போது, புத்திசாலித்தனமாக இருக்கும். அவர் கடைசியாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடினார். பின்னர் அவர் டிஎன்பிஎல் தொடரில் பங்கேற்றார். அங்கு, அவர் டாப் ஆர்டரில் பேட்டிங்செய்வதை நாங்கள் பார்த்தோம். அதுவே தற்போது அவரது பேட்டிங்குக்கு உதவியது, இவ்வாறு ரோஹித் சர்மா கூறினார்.

தோல்வி குறித்து வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ கூறும்போது, “இந்த போட்டியில் நேர்மறையான விஷயம் என்னவென்றால், ஹசன் மஹ்முத், தஸ்கின் அகமது மற்றும் நஹித் ராணா ஆகியோர் முதல் 2-3 மணி நேரத்தில் பந்து வீசிய விதம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.

கடந்த சில தொடர்களாக வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதை நாங்கள் தொடர விரும்புகிறோம். ஆட்டத்தின் முடிவைப் பற்றி சிந்திக்காமல், எங்களால் முடிந்தவரை பேட்டிங் செய்ய முயற்சிக்கவும், எங்கள் செயல்முறையைப் பின்பற்றவும் விரும்பினோம். பந்துவீச்சாளர்கள் சிறந்த வேலையைச் செய்தனர். அடுத்த போட்டியில் பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஒன்றைச் செய்வார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

48 mins ago

விளையாட்டு

51 mins ago

விளையாட்டு

54 mins ago

விளையாட்டு

58 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்