லீட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை ஆஸ்திரேலியா 68 ரன்களில் வீழ்த்தி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்று முன்னிலை பெற்றது.
டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். ஆஸ்திரேலியா 44.4 ஓவர்களில் 270 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது, இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களில் 202 ரன்களுக்கு சுருண்டது. மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் ஹேசில்வுட், ஹார்டி, கிளென் மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
மிட்செல் ஸ்டார்க் எடுத்த 3 விக்கெட்டுகளில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக்கிற்கு வீசிய இன்-ஸ்விங்கிங் யார்க்கர் அற்புதமான பந்து. இங்கிலாந்து சேசிங்கில் பில் சால்ட் (12), வில் ஜாக்ஸ் (0), ஹாரி புரூக் (4), பென் டக்கெட் (32), லியாம் லிவிங்ஸ்டன் (0) ஆகியோர் விக்கெட்டுகளை சடுதியில் இழந்து 10 ஓவர்களில் 65 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தட்டுத்தடுமாறியது. இதில் ஹார்டி 2 விக்கெட்டுகள், ஸ்டார்க் 2 விக்கெட்டுகள், மற்றும் ஹேசில்வுட் 1 விக்கெட்.
ஜேமி ஸ்மித், பெத்தெல் சேர்ந்து மேலும் சரிவை தடுத்து நிறுத்தி 55 ரன்களைச் சேர்த்தனர். ஜேக்கப் பெத்தெல் 25 ரன்களில் மேக்ஸ்வெல்லின் ஷார்ட் பிட்ச் பந்தை ஸ்டார்க் கையில் நேராக அடித்து வெளியேறினார். 31-வது ஓவரில் 49 ரன்களை எடுத்த ஜேமி ஸ்மித், ஹேசில்வுட்டின் சற்றே சுர்ரென்று வேகமாக வந்த பந்தை பிளிக் ஆட மெக்கர்க் மிட்விக்கெட்டில் கேட்சை எடுத்தார்.
இவர்களுக்குப் பிறகு பிரைடன் கார்ஸ் 26 ரன்களையும் ஆதில் ரஷீத் 27 ரன்களையும் எடுத்தனர். கடைசியாக ஆலி ஸ்டோன் விக்கெட்டை ஸ்டார்க் வீழ்த்த இங்கிலாந்து கிட்டத்தட்ட 10 ஓவர்கள் மீதம் வைத்து 202 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி கண்டது. முன்னதாக முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து பந்து வீச்சைப் புரட்டி எடுத்த ட்ராவிஸ் ஹெட் 29 ரன்களில் கார்ஸ் வீழ்த்தினார். மேத்யூ ஷார்ட், விக்கெட் கீப்பர் ஸ்மித்திடம் கேட்ச் ஆகி பாட்ஸ் பந்தில் 29 ரன்களுக்கு வெளியேறினார்.
கிளென் மேக்ஸ்வெல்லை 7 ரன்களில் வீழ்த்திய ஆதில் ரஷீத் ஒருநாள் கிரிக்கெட்டில் 200-வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை புரிந்தார். வேகமாக 200 விக்கெட் மைல்கல்லை எட்டிய 3-வது ஸ்பின்னர் ஆனார் ஆதில் ரஷீத். ஸ்டீவ் ஸ்மித் நம்மூர் கோலி போல் பேட்டிங்கில் தட்டுத் தடுமாறி பாட்ஸின் அட்டகாசமான இன்ஸ்விங்கரில் ஸ்டம்புகள் பறக்க வெளியேறினார்.
கேப்டன் மிட்செல் மார்ஷ் 59 பந்துகளில் 6 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 60 ரன்களையும் பின்னால் களமிறங்கிய அலெக்ஸ் கேரி 67 பந்துகளில் 8 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 74 ரன்களையும் விளாச ஆஸ்திரேலியா 270 ரன்களை எட்டியது, ஆனால் 44.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் செம சாத்து வாங்கி 75 ரன்களை வாரி வழங்கினார். பாட்ஸ், ரஷீத், பெத்தெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அலெக்ஸ் கேரியின் இன்னிங்ஸ் இல்லையென்றால் ஆஸ்திரேலியா தோற்றிருக்கும் வாய்ப்பும் இருந்தது, அதனால்தான் அலெக்ஸ் கேரி இன்னிங்ஸின் முக்கியத்துவம் தெரிந்து அவருக்கு ஆட்ட நாயகன் விருதை அளித்தனர். செப்டம்பர் 24-ம் தேதி டுர்ஹாமில் 3வது ஒருநாள் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறவிருக்கிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago