அண்ணா பல்லைக்கழக வாலிபால்: அரை இறுதியில் கோஜன், வேலம்மாள் அணிகள்

By செய்திப்பிரிவு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மண்டலம்-1 வாலிபால் போட்டி கவரப்பேட்டையில் உள்ள எம்.ஆர்.கே.பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. 17 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரில் நேற்று கால் இறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் கோஜன் பொறியியல் கல்லூரி 25-12, 25-12 என்ற செட் கணக்கில் ஆர்எம்கே பொறியியல் கல்லூரி அணியையும், பிரதியுஷா கல்லூரி 25-12,25-22 என்ற செட் கணக்கில் வேலம்மாள் இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி அணியையும் வீழ்த்தின.

3-வது கால் இறுதி ஆட்டத்தில் வேலம்மாள் பொறியியல் கல்லூரி 25-19, 25-18 என்ற செட் கணக்கில் ஆர்எம்டி பொறியியல் கல்லூரி அணியையும், கடைசி கால் இறுதி ஆட்டத்தில் ஏ.எம்.எஸ். பொறியியல் கல்லூரி, 25-18, 25-22 என்ற செட் கணக்கில் வேல் மல்டி டெக் பொறியியல் கல்லூரி அணியையும் தோற்கடித்தன. முதல் அரை இறுதி ஆட்டத்தில் கோஜன் பொறியியல் கல்லூரி - ஏம்.எம்.எஸ் பொறியியல் கல்லூரி அணிகள் மோதுகின்றன. 2-வது அரை இறுதி ஆட்டத்தில் வேலம்மாள் பொறியியல் கல்லூரி - பிரதியுஷா கல்லூரி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்