சென்னை: இந்தியா - வங்கதேச அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 81 ரன்களைச் சேர்த்துள்ளது.
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 339 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து விளையாடிய வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 149 ரன்களில் சுருண்டது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை இந்தியா தொடங்கியது.
தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்களில் கிளம்பினார். அடுத்து வந்த விராட் கோலியும் - ஷுப்மன் கில்லும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் கோலி நிலைக்கவில்லை. 17 ரன்களில் விக்கெட்டானார். இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 81 ரன்களைச் சேர்த்துள்ளது. கில் 33 ரன்களுடனும், ரிஷப் பந்த் 12 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர். இதன் மூலம் இந்தியா 308 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago