சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணிக்கு எதிராக நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் மஹ்முத் அபாரமாக பந்து வீசினார்.
அவர், இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா (6), ஷுப்மன் கில் (0), விராட் கோலி (6), ரிஷப் பந்த் (39) ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்து அசத்தினார். 24 வயதான ஹசன் மஹ்முத், தனது 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார்.
சட்டோகிராமுக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த ஹசன் மஹ்முத்தின் திறனை இளையோருக்கான கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்ட் மற்றும் முன்னாள் மேற்கிந்திய தீவுகள் வேகப்பந்து வீச்சாளர் மேற்கிந்திய தீவுகள் வேகப்பந்து வீச்சாளர் ஓட்டிஸ் கிப்சன் ஆகியோரே கண்டறிந்தனர். இவர்கள் இருவரும் வங்கதேச அணியின் பயிற்சியாளர் குழுவில் கடந்த காலங்களில் ஒரு அங்கமாக இருந்தவர்கள். மேலும் முன்னாள் பயிற்சியாளரான ரஸ்ஸல் டொமிங்கோ, ஹசன் மஹ்முத்தின் ஸ்விங் திறனை ‘கடவுள் வரம்’ என்று அழைத்திருந்தார்.
2015-ம் ஆண்டு வங்கதேச அணியின் யு-16 அணியில் இடம்பெற்ற ஹசன் மஹ்முத் அதன் பின்னர் 2018-ம் ஆண்டு நடைபெற்ற யு-19 உலகக் கோப்பையில் வங்கதேச அணிக்காக விளையாடி தாக்கத்தை ஏற்படுத்தினார். அடுத்த ஆண்டில் யு-23 அணியில் இடம் பெற்று வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை தொடரில் விளையாடினார்.
தொடர்ந்து டாக்கா பிரீமியர் லீக், வங்கதேச பிரீமியர் லீக் மற்றும் வங்கதேச கிரிக்கெட் லீக் ஆகியவற்றில் பங்கேற்று, 2020-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான சர்வதேச டி20 ஆட்டத்தில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சேர்க்கப்பட்டார். இதன் பின்னர் இந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகியிருந்தார். அந்த ஆட்டத்தில் ஹசன் மஹ்முத் இரு இன்னிங்ஸையும் சேர்த்து 6 விக்கெட்கள் வீழ்த்தியிருந்தார்.
இதைத் தொடர்ந்து கடந்த மாதம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ராவல்பிண்டியில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார். சேப்பாக்கம் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 18 ஓவர்களை வீசிய அவர், 4 மெய்டன்களுடன் 58 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
42 mins ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago