IND vs BAN | அஸ்வின் ‘அசுர’ சதத்தால் மீண்ட இந்தியா - முதல் நாளில் 339 ரன்கள் சேர்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 339 ரன்களைச் சேர்த்தது. இதில் ரவிச்சந்திரன் அஸ்வின் 102 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 86 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர்.

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணிக்காக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். வேகப்பந்து வீச்சுக்கு சாதகம் அளிக்கும் வகையில் சிவப்பு மண் ஆடுகளம் இந்தப் போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ளது.

வங்கதேசம் டாஸ் வென்ற சூழலில் அந்த அணியின் ஹசன் மஹமூத் அதை சாதகமாக்கி கொண்டார். ரோகித் சர்மா (6 ரன்கள்), ஷுப்மன் கில் (ரன் ஏதும் இல்லை), விராட் கோலி (6 ரன்கள்) ஆகியோரை ஹசன் மஹமூத் வெளியேற்றினார். அதன் பின்னர் சர்ப்ரைஸ் மூவாக ரிஷப் பந்த் களத்துக்கு வந்தார். ஜெய்ஸ்வாலுடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்த அவர், 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜெயஸ்வால் 56 ரன்களுடன் கிளம்பினார். கே.எல்.ராகுலும் 16 ரன்களில் பெவிலியன் புகுந்தார். 43ஆவது ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களைச் சேர்த்திருந்தது இந்திய அணி.

இந்திய அணியை சரிவிலிருந்து மீட்க களத்தில் கைகோத்தனர் அஸ்வின் - ஜடேஜா இணை. வங்க தேச பந்துகளை அடித்து துவம்சம் செய்தனர். இருவரையும் கட்டுப்படுத்த முடியாமல் பவுலர்கள் திணறினர். 58 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார் அஸ்வின். ஜடேஜாவும் அவரை பின்தொடர்ந்தே வந்தார். 73 பந்துகளில் அரைசதம் கடந்தார் ஜடேஜா. மறுபுறம் தொடர்ந்து அஸ்வின் விளாசித் தள்ள, 108 பந்துகளில் சதமடித்து மிரட்டினார்.

டெஸ்ட் போட்டியில் அஸ்வின் அடிக்கும் 6ஆவது சதம் இது. சேப்பாக்கத்தில் இது அவருக்கான 2வத சதம். மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்வின் - ஜடேஜா இணை 195 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்து அசத்தியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்களை குவித்துள்ளது இந்திய அணி. ரவிச்சந்திரன் அஸ்வின் 102 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 86 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர். வங்க தேச அணி தரப்பில் ஹசன் மஹமூத் 4 விக்கெட்டுகளையும், மெஹதி ஹசன், நஹீத் ராணா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்