வாழ்வா சாவா? : மின்சாரம் பாய்ந்து பலியான 12 வயது பிரேசில் ரசிகர்; வங்கதேசத்தில் கால்பந்து வெறி; அர்ஜெண்டினா-பிரேசில் ரசிகர்கள் ரகளை

By ஏஎஃப்பி

 

பங்களாதேஷில் 2018 உலகக்கோப்பை கால்பந்துக் காய்ச்சல் வன்முறையாக வெடித்துள்ளது, மெஸ்ஸி-நெய்மர் மோதலாகவும் அர்ஜெண்டினாவா பிரேசிலா என்பதாகவும் ரசிகர்களிடையே ஆரவாரப் பெருக்கு ஒரு கட்டத்தில் வன்முறையாக வெடித்துள்ளது.

அதாவது தெருக்களில் இறங்கி கோடாரி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைச் சுழற்றியபடி அர்ஜெண்டினா, பிரேசில் ரசிகர்களிடையே மோதல் வெடித்துள்ளது.

தங்கள் நாடு உலகத் தரவரிசையில் 194வது இடத்திலிருந்தாலும் உலகக்கால்பந்து மகா ஆட்டக்காரர்களுக்கான பின் தொடரல் வங்கதேசத்தில் அதிகம்.

கடந்த வாரத்தில் மத்திய நகரான பந்தாரில் லியோனல் மெஸ்ஸி, பிரேசில் நட்சத்திரம் நெய்மர் ஆகியோரது ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டு இருதரப்பினரும் நடுரோட்டில் பயங்கர ஆயுதங்களுடன் சண்டை மூண்டுள்ளது. இதில் தந்தை மற்றும் மகன் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக செய்திகள் வருகின்றன.

இதில் பிரேசில் கொடியை சாலையோரமுள்ள ஒரு கம்பத்தில் கட்ட முயன்ற 12 வயதுச் சிறுவன், பிரேசில் ரசிகர் மின்சாரம் பாய்ந்து பலியானது வங்கதேசத்தில் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.

160 மில்லியன் மக்கள் வாழும் பங்களாதேஷில் அர்ஜெண்டினா, பிரேசில் நாட்டுக் கொடிகள் ஆங்காங்கே பறக்க விடப்பட்டு திருவிழாக்கோலம் பூண்டுள்ளது நகரங்கள்.

இரு அணிகளின் ரசிகர்களும் கொடி அணிவகுப்பையே சாலைகளில் நடத்தி வருகின்றனர். வடக்கு நகரமான மதர்கஞ்சில் இருசக்கர வாகன ஊர்வலங்களும் நடைபெற்றுள்ளன.

இது குறித்து உள்ளூர் போலீஸ் தலைமை மொகமத் ரஃபீக் கூறும்போது, “கால்பந்து பித்தத்தையும் வெறியையும் காட்ட இவர்கள் மீட்டிங்கும் போடுகின்றனர், நகர்களில் கடும் பதற்றமும் உற்சாகமும் கலந்து பெருகியுள்ளன” என்றார்.

உலகக்கோப்பை நாடுகளின் கொடிகளை பாரிசல் பல்கலைக் கழகத்தில் பறக்க விட முயற்சி செய்ததைத் தடுத்த வழக்கறிஞர் ஒருவர் இதற்காக 7,000 மாணவர்களைத் தடை செய்யும் உத்தரவையும் கோர்ட் மூலம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மாரடோனா முதல் மெஸ்ஸி வரை...

1986 உலகக்கோப்பையில் டீகோ மாரடோனாவின் அபார ஆட்டம் அர்ஜெண்டினாவுக்குக் கோப்பையை பெற்றுத் தந்தது, ஆனால் வங்கதேசத்தில் பீலே வீடுதோறும் புழங்கும் ஒரு பெயர், பீலேயின் கதை வங்கதேசத்தின் பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ளது. அதனால் பிரேசில் என்றாலே அங்கு ஒரு தனி மோகம் வளர்ந்துள்ளது. ஆனால் 1986 உலகக்கோப்பைக்குப் பிறகு மாரடோனா வங்கதேச கால்பந்து ரசிகர்களின் இதயங்களை வென்றார். இங்குதான் பகைமை தொடங்கியது என்கிறார் ஸ்போர்ட்ஸ் இணையதளம் நடத்தும் கெய்சர் என்பவர்.

13 வயதே நிரம்பிய மக்சுத் இலாஹி, அர்ஜெண்டினா கொடியை விலைக்கு வாங்கி ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “நான் அர்ஜெண்டினாவை நேசிக்கிறேன், காரணம் லியோனல் மெஸ்ஸி, அவர் பந்தைக் கடைந்து எடுத்துச் செல்லும் விதம் நம்பமுடியாதது, திகைப்பூட்டுவது என்கிறார்.

வங்கதேசம் போன்ற ஒருநாட்டில் பிரேசில், அர்ஜெண்டினா மோதல் ஏற்பட்டுள்ளதன் காரணங்களை சமூகவியல் அறிஞரக்ளும் மண்டையைப் பிய்த்த்துக் கொண்டு ஆராய்ந்து வருகின்றனர், ஆனால் அவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

டாக்கா பல்கலை பேராசிரியர் ஒருவர் கூறும்போது, “இவர்களில் பாதிப்பேருக்கு பிரேசில், அர்ஜெண்டினா எங்கு உள்ளது என்பதே தெரியாது, ரத்த உறவோ, மொழி உறவோ கிடையாது, ஆனாலும் பித்தாக அலைகிறார்கள். எனக்கு உண்மையில் புரியவில்லை” என்றார்.

ஆனால் சில சமூக ஆர்வலர்கள் வன்முறைகளை ஆதரிக்காவிட்டாலும் ‘அர்ஜெண்டினா கொடியை தன் வீட்டு மாடியில் பறக்க விடுவதை யாரால் தடுக்க முடியும்?, உலகக்கோப்பைக் கால்பந்து ஒரு திருவிழா, மக்கள் போற்றும் திருவிழா என்று ஆதரவாக பேசியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்